பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

இலக்கியக் காட்சிகள்


உலக மக்கள் விரும்பும்படி வாழ்கின்ற சிறந்த அறிவுள்ள வனது செல்வம், ஊரின் பொதுக்கிணற்றிலே நீர் நிறைந் திருப்பது போன்றதாகும் என்கிறார்:

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு.

(குறள் ; 215 )

மேலும் அவர், உலகத்தாரோடு, அவர்தம் நடைமுறை ஒழுகலாறுகளுக்கொப்ப வாழவேண்டும் என்ற அறிவுரை யையும் புகல்கின்றார். உலகம் எவ்வாறு நடக்கின்றதோ, அவ்வாறு உலகத்தையொட்டி வாழ்வதே அறிவுடைமை யாகும் என்கிறார்.

எவ்வது உறைவது உலகம்; உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு.

(குறள் , 426)

இடைக்காலத்தே தமிழில் எழுந்த காப்பியங்களும் உலகை ஒரு குடும்பமாக எண்ணிச் சில கருத்துக்களைக் கொண்டிலங்கக் காணலாம். பசிப்பிணி போக்க அமுதசுரபி கொண்டு ஏழைகளின் துயர்துடைக்கும் திருப்பணியில் ஈடுபட்ட மணிமேகலை, சமுதாயத் தொண்டராய், சமயத் தொண்டராய் எண்பத்தோராண்டுகள் நாட்டிலே கால் தரைதோய நடந்து சென்று தொண்டாற்றிய திருநாவுக் கரசர் முதலானோரும் உலகம் வாழவேண்டும் என்ற ஒப்பற்ற எண்ணங் கொண்டவர்கள் ஆவர். திருஞான சம்பந்தர் சைவமும் தமிழும் தழைத்தினிதோங்கப் பாடு பட்ட பெருந்தகையாவர். எல்லோரும் இனிது வாழ வேண்டும் என்று அவர் கொண்ட வேட்கை பின்வரும் அவர்தம் பாட்டால் புலனாகக் காணலாம்: