உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியக் கேணி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உடன் கட்டை ஏறல்

99


யிற் கூறினார். எனவே தங்தைதாய் முதலாயினாரை யிழந்தார்க்கு அம்முறை சொல்லிக் காட்டலாம்; இஃது அவ்வாறு சொல்லலாகாமையின் இவ்விடும்பை பெரிய வருத்தமாகத் தோன்றுவது இயல்பேயாகும்.

காதலன் இறப்பின்

காதலன் இறப்பின் மனைவி யிறந்துவிடுவது குறித்துப் பல செய்திகள் காணப் பெறுகின்றன. தலைவன் உயிரை நீக்கின வேலாலே மனைக்கிழத்தி தன் உயிரை மாய்த்துக் கொள்ளுதல் ஒன்று. இஃது "ஆஞ்சிக் காஞ்சி" எனப்பெறும்.

"மன்னுயிர் நீத்த வேலின் மனையோள்
இன்னுயிர் நீப்பினும் அத்துறை யாகும் "

என்பர் புறப்பொருள் வெண்பாமாலை யாசிரியர். தொல்காப்பியனார், "நீத்த கணவன் தீர்த்த வேலின் பெயர்த்த மனைவி ஆஞ்சி" என்ற துறையிலே அமைத் தது இதனையே என்பர் இளம்பூரணர்.

தொல்காப்பியர், "கொண்டோன் தலையொடு முலையும் முகனும் சேர்த்தி முடிந்தநிலை" என்ற ஒரு துறையைக் கூறுவர். கணவனது தலையோடு தனது முலைகளையும் முகத்தையும் சேர்த்துத் தலைவி இறந்து படுவது இதுவாகும். இதனைத் "தலையொடு முடிதல்" என்பர் புறப்பொருள் வெண்பாமாலையுடையார்.

இனிக், " காதலர் இறப்பின் கனையெரி பொத்தி, ஊதுலைக் குருகின் உயிர்த்தகத் தடங்காது, இன்னுயிர் ஈவர் " ஒரு சாரார். அவ்வாறு உடனுயிர் நீத்தவர் அறக்