பக்கம்:இலக்கியக் கேணி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிப் பெருமாள் 59,

அப்பாடல் :

தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர் பருதி பரிமேலழகர்-திருமலையர் மல்லர் கவிப்பெருமாள் காலிங்கர் வள்ளுவர் நூற்(கு) எல்லையுரை செய்தார் இவர் என்பதாம்.

இப்பாடலகத்துக் குறிக்கப் பெற்ற கவிப்பெரு.

மாள்' என்பவர் பரிப்பெருமாளேயாவர்.

ஊர்: பரிப்பெருமாள் செழுவை ' என்ற ஊரினர். இதனைக் காமத்துப்பால் இவருரை இறுதியிற். காணும் செய்யுளால் அறியலாம்.

அப்பாடல் வருமாறு:

தெள்ளி மொழியியலைத் தேர்ந்துரைத்துத் தேமொழியார் ஒள்ளிய காமநூல் ஒர்ந்துரைத்து-வள்ளுவனர் பொய்யற்ற முப்பாற் பொருளுரைத்தான் தென்செழுவைத் தெய்வப் பரிப்பெருமாள் தேர்ந்து.

இதிற்காணும் தென்செழுவை, பாண்டி மண்ட்லத்துச் சேது நாட்டின் கண்ணது. கி.பி. 1268-இல் பட்ட மேற்ற மாறவர்மன் குலசேகர பாண்டியன், பழுதறு. சிறப்பின் செழுவைக் காவலன்' என்று கூறப்படுகின் ருன். இதனுைம் செழுவை பாண்டியராட்சிக் குட்பட்ட தோரூர் என்று அறியலாம்.

இவர் நூல்கள்: மேற்காட்டிய தெள்ளிமொழி. யியலே ' என்ற பாடலால், இவர் ' மொழியியல் நூல் (சொல்லிலக்கணம் கூறும் நூல்) உரைத்தார் என்றும், காமநூல் ஒன்றையும் செய்தார் என்றும் அறியப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/60&oldid=676755" இலிருந்து மீள்விக்கப்பட்டது