பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
100 புலவர் கா. கோவிந்தன்
 


என் அரசவை இருந்து, அறவுரை பல வழங்கி வருவதோடு என்னைப் போற்றிப் புகழும் பண்புடையராய் மாங்குடி மருதன் முதலாம் புலவர் பெருமக்கள் என்னைப் பாடாது விடுமாறு, பழிமிகு செயலுடையனாவேன்! பல பொருள் கொடுத்துப் பாராட்டிப் பேண வேண்டியவர்களாய பாணன், பொருநன், கூத்தன் முதலாம் பரிசிலர்கள், வறுமையால் வாடி, வாயிலில் வந்து நின்று, கண்ணிர் விட்டுக் கலங்கும் காட்சியைக் கண்டும், அவர்க்குப் பொருள் கொடுத்து உதவ மாட்டாமைக்கும் ஏதுவாகிய வறுமை வாழ்வில் வாடுவேனாவேன்!” என வஞ்சினம் உரைத்து, அதன் வழியே, குடிபழி தூற்றக் கோலோம் பல் கூடாது; பழிபல நிறைந்து, புலவர் பாராட்டைப் பெறாது விடுத்தல் பெரும் பேதைமையாம்; வாயில் வந்து இரந்தார்க்கு வழங்கி வாழ்தலே வாழ்வாம் என்பன போலும் அறவுரை வழங்கிய பசும்பூண் பாண்டியன் புகழ் பாரெல்லாம் பரவுக!