பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

களைக் கொண்டு எழுதுவதுதான் இலக்கியம். எனவே, தொல்காப்பியர் காலத்திலேயே வேங்கட மலையில் முருகன் கோயில் இருந்தது என்பது பெறப்படும்.

நக்கீரர் கூறாமை

தொல்காப்பியனாருக்கும் பனம்பாரனாருக்கும் வேங்கடமலை தெரிந்திருக்கும் போது நக்கீரருக்கு ஏன் வேங்கடமலை தெரிந்திருக்கவில்லை? அவர் தமது திருமுருகாற்றுப் படை நூலில் வேங்கடமலையை ஏன் குறிப்பிடவில்லை - என்று சிலர் கேட்கலாம். குறிப்பிட்ட ஒரு சிலருக்குத் தெரிந்த ஒன்று வேறு சிலருக்குத் தெரியாமல் இருக்கலாம். அப்படியே நக்கீரருக்குத் தெரியாமல் இருக்கலாம் அப்படியே நக்கீரருக்கு வேங்கடத்தைத் தெரியும் எனினும் அவர் தமது நூலில் வேங்கட மலையைக் குறிப்பிட்டுத்தான் தீர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வேங்கடத்தைக் குறிப்பிட்டாலும் திருத்தணிகை என்ன ஆவது? இன்னும் மற்ற மற்ற ஊர்கள் என்ன ஆவது?

இங்கே இன்றியமையாத ஒரு செய்தி எண்ணத்தக்கது. அதாவது:– நக்கீரர் திருமுருளாற்றுப் படையில் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்). திருவாவினன்குடி, திருவேரகம் ஆகிய ஊர்களைக் குறிப்பிடும் போது, அண்மையிலுள்ள அவ்வூர்களைப் பற்றிய சில விவரங்களும் சில இலக்கியப் புனைவுகளும் (வர்ணனைகளும்) தந்துள்ளார். நக்கீரர் இந்த ஊர்கட்குச் சென்று நேரில் கண்டிருக்கலாம். ஆனால், தொலைவிலுள்ள திருப்பதி-திருமலை, திருத்தணிகை முதலிய ஊர்களைப் பற்றிக் கேட்விப்பட்டிருப்பதைத் தவிர நேரில் சென்று கண்டறியாமல் இருக்கலாம் எனவே அவ்வூர்களைப் பற்றி விதந்து குறிப்பிட முடி-