பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியரங்கக் கலைஞரின் பொங்கல் கவிதை மறுமலர்ச்சித் தமிழ்க் கவிதைக்கு-அசை அசைத்த -சீர் போர்த்த-தளை தளைந்த (!) கவிதைக்கு-உள்ள உணர்ச்சி'க்கும் ஊறி வரும் புது உணர்வுகட்கும் மட்டுமே உயரிய இடம் வழங்கும்-மிக அண்மையில் கிடைத்திருக்கும் பரிசு இன்றைய தமிழக முதல்வர் தமிழவேள்-டாக்டர்கலைஞர்-கவிஞர்-மு. கருணாநிதி அவர்களின் கவியரங்கக் கவிதைகள் பதினான்கையும் இதயத்தைத் தந்திடு அண்ணா என்ற கண்ணிர்க் கவிதை ஒன்றையும் தன்ன கத்தே கொண்ட கவியரங்கில் கலைஞர்" என்ற 187 பக்கங்கள் கொண்ட 6 உரூபாய் விலையுள்ள அழகிய வெளியீடு ஆகும். இந்தப் பதினாறு கவியரங்கக் கவிதை களுள் நான்கு வானொலி வழி வந்தவை (ஒன்று திருச்சி : ஏனைய சென்னை). இந்த நான்குள்ளும் 12.1.70-இல் சென்னை வானொலியில் பொங்கல் திருநாள்' என்ற தலைப்பில் நடந்த கவியரங்கில் நம் முதல்வர் வழங்கிய தலைமைக் கவிதையில் பொங்கல் திருநாள் பற்றி அவர் உள்ளத்தில் பொங்கிய எண்ணங்களை மட்டும் எண்ணு வதே இச்சிறு கட்டுரையின் சிறந்த நோக்கம். கவிஞர் பொங்கல் திருநாளை எழிற் பொங்கல் திரு தாள்" என்றும் அழகு தமிழ்ப் பொங்கல் நாள்" என்றும் போற்றுகிறார். இதிலிருந்து அவர் பொங்கல் திருநாளில் எழிலை மட்டும் பார்க்கவில்லை, அழகுத் தமிழையும் சேர்த்துப் பார்க்கிறார் என்ற செய்தி விளங்கும். இவ்வாறு உழவர் பெருநாளாகிய பொங்கல் திருநாள் தமிழ்த் திருநாளாய்க் காட்சி அளிப்பதால்தான் அவர்,

  • தமிழ்ப்பணி-மாசி இதழில் (1972) வெளிவந்த

கட்டுரை