பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$69 பிறவோ தலைப்புக்காகப் பிறந்தன. இவ்வளவு தொலைவு தலைப்பின் சிறப்பை எண்ணியதற்குக் காரணம் அத்தலைப்பின் ஒப்புயர்வற்ற தனிச் சிறப்பே. இவ்வுண்மை -யையும் இனி ஆராய்வோம். (2) முதலாவதாகக் கருதத்தக்கது 357 வரிகள் கொண்ட இந்தக் கவிதைக் காணிக்கை தமிழ்நாட்டின் தனி முதல்வர் தன் முன்னோர்க்கு - தன் முன்னாள் முதல்வருக்குச்செலுத்திய செய்யுள் காணிக்கை ஆகும். இந்நீண்ட பாட்டில் பல்வேறு தனிக் கூறுகள் (Units) ஒன்றோடொன்று நெய்யப்பட்டுள்ளன. ஈண்டு அவற்றை எண்ணுவோம்: (1) முதல் 21 வரிகள் ஒரு தனிக் கூறு எனலாம். இப் பாவடிகளில் பூவிதழ்கள் கொஞ்சுவதைக் காணலாம். இச் சிறப்பை இன்னும் கூர்ந்து ஆராயின் மலர்களின் மகரந்தத் துாள்கள் புலப்படும். அவை வழங்கும் வளம் சில வருமாறு: (அ) பேரறிஞர் உள்ளமும், வாய், விழி, கால், கை ஆகிய ஐந்தும் மலர்களாக உருவகிக்கப்படுகின்றன. அக்காட்சி காண்போம்: (1) பூவிதழின் மென்மையிலும் மென்மையான (புனித உள்ளம் - அன்பு உள்ளம் -1 அரவணைக்கும் அன்னை உள்ளம் - அவர். (2) மலர் இதழ்கள் தமிழ் பேசும் மா, பலா, வாழையெனும் முக்கனியும் மா, பலா, வாழையெனும் முக்கனியும் தோற்றுவிடும்.