பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 ஒப்புயர்ந்த தமிழ் முதல்வர்: ஒன்றாரும் ஒப்பும் சொல் வாற்றல் - செயலாற்றல் ஒருங்கிணைந்த ஒருபெரு முதல்வர். என்ன காரணம்? ஊழ் வினையா? சூழ்நிலையா? முன்னதைப் பகுத்தறிவு பழிக்கும்; பின்னதைச் சமயம் மறுக்கும். சூழ்நிலையும் யாரால் உருவாகிறது? என் விடை: ஊழ்நிலை இல்லையாயினும் உழைப்பு நிலை. கருவிலே அமைந்த திரு யான் மறுக்கவில்லை. அஞ்சுகத்தின் அருள்! ஆமாம். ஆனால் அதை ஒப்பினால் அங்கும் ஊழ்நிலை உதிக்கும்! எனவே, கலைஞர் காலம் நமக்குத் தந்த பரிசு எனப் பகரலாமா? எவ்வாராயினும் தமக்குப் பிறவியிலேயே அமைந்த பேராற்றல்களைக் கூர்தீட்டிக் கொண்டவர்சீராட்டிக் கொண்டவர் நம் கலைஞர். இதை எவரும் மறக்க-மறுக்க முடியாது. நாளும் வளரும் நம் கலைஞரின் வாழ்க்கையை ஊடுருவிப்பார்ப்பவர்க்கு இவ்வுண்மை விளங் காமல் போகாது. பதவி ஏற ஏறப் புகழ் ஏற ஏற-அவர் பண்புகளும் ஏற்றம் பெறுகின்றன: அவர் எழுத்து-பேச்சுஎண்ணம்-எல்லாம் ஏற்றம் பெறுகின்றன. அ. வ ர் உழைப்பு-உணர்வு இரண்டும் உயர்கின்றன! வெள்ளத் தனைய மலர் நீட்டம் போல் அவர் உயர்வுக்கு உள்ளம் உயர்வதைக் கான-கண்டு புதுக்குறள் எழுத-ஒரு புது வள்ளுவர் இன்று இல்லையே! மக்கள் தீர்ப்பு தெய்வத்தின் தீர்ப்பு: எப்படித்தான் பொருத்தமாகப் பட்டங்கள் பொருந்துகின்றனவோ? அறிஞர்-கலைஞர்- பேராசிரியர். கலைஞர் கையெழுத்திலேயே கலை மணக்கும் என்றால் அவர் இந் நாட்டிற்கு எழுதும் தலையெழுத்திலா கலை மணக்காது. இந்த நாட்டு-இந்திய நாட்டு-உலக நாட்டு முதல்வர் களுள் ஒருவர் கவிதை-கதை-கட்டுரை-நாடகம்-திரை உரை இத்தனையும் எழுத வல்லவர்-மாற்றாரும் மருள மேடைத் தமிழ் மகுடி வாசிக்க வல்லவர்-எந்த அரசியல் சாணக்கியரின் அவுரங்கசீப் அணைப்பிலிருந்தும் தப்பிய