பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை88

“'தமயந்தியே! நீ நளனை விரும்புவது 'சரியே. என்றாலும், உன் தந்தையாம் வீமராசன் வேறு ஒரு மன்னனுக்கு உன்னை மணம் செய்துவைக்க முடிவு செய்தால், நீ என் செய்வாய்?” என்றது.

இவ்வாறு அன்னம் கேட்டபோது, தமயந்தி, “'தாமரை சூரியனைத் தவிர்த்து வேறு ஒன்றைக் கண்டால் மகிழ்ந்து மலருமோ? அவ்வாறே குமுதம் சந்திரனைக் கண்டு மலருமே அன்றி வேறு எதையே னும் கண்டு மலருமோ? அவற்றைப்போலவே என் உள் ளம் நளனைத் தவிர்த்து வேறு அரசரை விரும் புமோ? விரும்பாது. இஃது உறுதி. மன்மதனே வரி" னும் அவனுக்கு மாலை இடேன். ஒரு வேளை என் தந்தையாம் வீமமகாராசர் வேறு ஓர் அரசனுக்கு என்னை மணம் முடிக்க எண்ணினால், நான் தீயில் விழுந்து உயிர் விடுவேன். அன்னமே, நீ நளனோடு என் னைச் சேர்த்து வைக்கவில்லை எனில், நான் உயிர் விடுவேன். ஆகவே, விரைவில் இவ்விடம் ' விட்டு நளன்பால் சென்று என் எண்ணத்தினை உணர்த்துக” என்று வேண்டினாள். “மேலும் அன்னத்தை நோக்கி, ""'அன்னமே! நீ நளனிடம் சமயும் அறிந்து என் நிலைமைகளைக் கூறவேண்டும். சமய சந்தர்ப்பம் தெரிந்து பேசவேண்டும். வேற்ற ரசர்கள் கப்பம் கட்டுதற்கு வந்து வணங்கி நிற்கும் போதும், பகை அரசர்கள்பால் நளன் சினம் கொண்டு பேசும்போதும், மந்திரி முதலியோர் சூழ்ந்து, ஆழ்ந்து ஆலோசனை செய்யும்போதும் சொல்லாதே. ஆகவே, நளன் தனித்து இருக்கும் சமயம் தெரிந்து கூறுக என்றனள்.