பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

இலக்கியத் தூதர்கள்

‘நைஷதம்’ என்னும் காவியத்தின் மொழிபெயர்ப்பாகும். அவ்வடமொழி நூலின் சுவை குன்றாமல் அதிவீரராம பாண்டியன் மொழி பெயர்த்துள்ளான் என்று இருமொழி நூல்களையும் ஒருங்கே பயின்ற அறிஞர்கள் உரைப்பர்.

வெண்பாவிற் புகழேந்தி

தமிழில் உள்ள நால்வகைப் பாக்களில் வெண்பாவே முதன்மை வாய்ந்தது. புலவர்கள் அதனைப் பாடுவதும் அருமையாகும். ஆதலின் ‘புலவர்க்கு வெண்பாப் புலி’ என்றே வழங்கும் பழமொழியுண்டு. வெண்பா வகையினுள் ஒன்றாகிய குறள் வெண்பாக்களால் தம் நூலைப்பாடிய திருவள்ளுவரை ‘முதற்பாவலர்’ என்று பாராட்டுவதும் இக் காரணத்தாலேயே ஆகும். எனவே, செப்பலோசையிற் சிறந்து விளங்கும் செவ்விய இனிய நேரிசை வெண்பாக்களால் நளன் வரலாற்றைப் பாடிய புகழேந்தியாரை வெண்பாப் பாடுவதில் வீறு பெற்றவர் என்று வியந்து போற்றுவாராயினர்.

புகழேந்தியார் வைணவப் புலவர்

நளவெண்பா சுயம்வர காண்டம், கலிதொடர் காண்டம், கலி நீங்கு காண்டம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பெற்றுள்ளது. ஒவ்வொரு காண்டத்தின் தொடக்கத்திலும் நூலாசிரியர் திருமாலுக்கு வணக்கங் கூறியுள்ளார். மேலும், கலி தொடர் காண்டத்தில் நளனைக் கலி தொடர்ந்தவாற்றைக் குறிப்பிடும் புலவர், ‘நாராயணாய நமவென்று அவனடியிற் சேராரை வெந்துயரம் சேர்ந்தாற் போல்’ கலி தொடர்ந்தது என்று கட்டுரைக்கின்றார், கலிநீங்கு