பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாதவி யனுப்பிய தூதர்

57

கொண்டு காட்டுக! அவர்கள் மலரடி வணங்கினேன் என்று எனது வணக்கத்தைச் சொல்லுக! நின் நடுக்கத்தை யொழித்து என் பெற்றோரின் நன்மனத்திற் பொருந்திய பெருந்துயரைக்களைய விரைந்து செல்லுக!’ என்று கூறிக் கோசிகனைச் செல்ல விடுத்தான்.

மாதவியின் மாளாத் துயரம்

அவன் தன் முயற்சி பயன்படாமை உணர்ந்து வருந்திக் காவிரிப்பூம்பட்டினத்திற்குத் திரும்பினான். மாதவியிடம் கோவலன் மனப்பாங்கை எடுத்துரைத்தான். அவள் இன்னது செய்வதெனத் தெரியாது திகைத்து இன்னலுற்றாள். தான் பிறந்த குலத்தையும், கணிகையர் வாழ்வையும், கற்ற கலையையும் பழித்துத் தன்னையே நொந்து கொண்டாள்.

கடைத் தூதர் இருவர்

இங்கே மாதவியின் காதல் தூதாக வசந்தமாலையென்னும் அவள் தோழியைக் கண்டோம்; கோசிகன் என்னும் அந்தணாளன் ஒருவனையும் கண்டோம். இவர்கள் இருவரும் ஓலை கொடுத்து நிற்பாராய கடைத் தூதர் இனத்தைச் சார்ந்தவராகக் காட்சி தருகின்றனர். மேலும் கோசிகன், கோவலனுக்கும் தூதாய் அமைகின்ற சிறப்பை இங்குக் காண்கின்றோம்.