பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாண்டவர் விடுத்த தூதன்

81

துரியோதனன் அரசவையில் கண்ணன்

மறுநாட் காலையில் கண்ணன் துரியோதனன் அரசவை நண்ணினான். ஆங்கிருந்த வீடுமன் முதலிய பலர் கண்ணனைப் போற்றி வரவேற்றனர். அவ் வண்ணல் தனக்கென அமைத்த இருக்கையில் எழுந்தருளினான். உடனே துரியோதனன், கண்ணனை நோக்கி, இந்த நகருக்கு வந்த நீ எனது மாளிகைக்கு வராமல் விதுரன் மாளிகையிற் சென்று தங்கியதேன்?” என்று வினவினான். “என் வீடு, உன் வீடு என்று எனக்கு எந்த வேறுபாடும் இல்லை விதுரன் அன்புடன் எதிர்வந்து வரவேற்றுப் பேசினான் ; மேலும் நான் பாண்டவர் விடுத்த தூதனும் ஆவேன்; அவ்வாறிருக்க உனது வீட்டில் உணவுண்டு, பின்னர்; வெறுக்குமாறு உன்னுடன் உரையாடுவது முறை யாகுமோ ? அமைச்சர்களாக இருந்துகொண்டே ஒருவருடைய ஆட்சியினை அழித்தாலும், பெரியோர் அறிவுரையை மறுத்து கடந்தாலும், பிறர் செய்த நன்றியை மறந்தாலும், ஒருவர் மனையில் உண்டு பின்பு பகை கொண்டு அவருடன் பொருதற்குப் புகுந்தாலும் இவர்களுடைய பழி என்றும் அழியாது; இவர்கள் நால்வரும் நரகில் வீழ்தற்கே உரியவராவர்.” என்று கண்ணன் மறுமொழி யருளினான்.

“அரவ மல்கிய பதாகை யாய்! மதி
அமைச்ச ராய் அற சழிப்பினும்
குரவர் நல்லுரை மறுக்கி னும்பிறர்
புரிந்த நன்றியது கொல்லினும்
ஒருவர் வாழ்மனையில் உண்டு பின்னும் அவ
ருடன்அ ழன்றுபொற உன்னினும்
இரவி உள்ளளவும் மதியம் உள்ளளவும்
இவர்களே நரகில் எய்துவார்.”