பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பா இரவுப் பாடசாலையில் படித்துத்தான் அறிவை வளர்த்துக் கொண்டார். ஒவியம் வரைவதில் ஆர்வமும் திறமை யும் இருந்தன. எழும்பூரில் உள்ள 'ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ்' ஒவியப் பள்ளியில் சேர்ந்து படித்தார். 'கல்கி"க்கு வருவதற்கு முன்னால் மாசிலாமணி முதலியார் 'தமிழரசு" என்ற பெயரில் நடத்திய மாதப் பத்திரிகையில் அச்சுக் கோப்பவராக வேலை பார்த்தார். அப்போது பாவேந்தரின் தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்று தொடங்கும் பிரபலமான பாடலை தாம் அச்சுக்கோத்ததைப் பெருமையோடு சொல்வார் அப்பா. - 'கல்கி'யில் வெளியான 'முல்லைக்கொடியாள் நூல் வடிவம் பெற்றபோது அதற்குப் பேராசிரியர் கல்கி அருமையான முன்னுரை எழுதினார். நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே தொடங்கப்பட்ட தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பரிசு, முதன் முத லாக அந்த நூலுக்குத்தான் கிடைத்தது. அப்பாவின் எழுத்துகள் பலரையும் புருவம் உயர்த்தி வியக்க வைத்தன. நடை புதுசு, கதை புதுசு, வேகம் புதுசு. யார் இந்த விந்தன்?" என்று கேட்க வைத்தன. புத்தகப் பூங்கா என்ற பெயரில் நூல் வெளியீட்டகம் ஒன்றை யும் தொடங்கிக் கைகளைச் சுட்டுக் கொண்ட அனுபவமும் அப்பாவுக்கு உண்டு. அந்தப் பதிப்பகத்தில் அப்பா தன்னுடைய நூல்களை எதையும் வெளியிடவில்லை. சாண்டில்யனின் 'ஒன்பதாவது இரவு', ஜெயகாந்தனின் ஒரு பிடி சோறு, இளங்கோவனின் சாவே வா', அடால்ஃப் ஹிட்லரின் அந்தரங்கக் காதலிகள் என்று ஒரு நூல் இந்த நான்கும்தான் அதில் வெளியிடப்பட்டவை. இவற்றில் ஒரு பிடி சோறு தொகுப்பை நூல் மதிப்புரைக்காக என்று எடுத்துப் போய் ஆனந்தவிகடன் அலுவலத்தில் கொடுத்தோம். அந்தக் கதைகளைப் படித்துப் பார்த்த பிறகுதான் ஜெயகாந்தனுக்கு ஆனந்த விகடனில் மிகப் பெரிய கெளரவம் கிடைத்தது என்பது சுவையான நிகழ்வு. 'குழந்தைகள் கண்ட குடியரசு' என்று ஒரு படத்தை பந்துலு, தயாரித்தார். அதற்குக் கதை - வசனம் எழுதியதற்காகக் கிடைத்த பணத்தில்தான் இப்போதுள்ள ஒன்றரை கிரவுண்டு வீட்டை 1961இல் அப்பா வாங்கினார். நிறைய மரங்கள், விதம் விதமான இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 9