பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேய்த்தொழிலாட்டி இரா. கலைக்கோவன் அப்பர் பெருமானின் நான்காம் திருமுறையில் தொண்ணுற்றைந் தாம் பதிகமாக அமைந்துள்ளது விழிமிழலை விருத்தம். 'மறக்கினும் என்னைக் குறிக் கொள்மினே என வேண்டி முடியும் இந்த அருமை யான பதிகத்தின் நான்காம் பாடலில் (தருமபுரம், 1957) அப்பர் புதிய தகவலொன்றைப் பொதிந்து வைத்துள்ளார். தீத்தொழிலான் தலை தீயில் இட்டுச் செய்த வேள்வி செற்றீர் எனத் தொடங்கும் இப்பாடலின் இரண்டாம் அடி, பேய்த்தொழிலாட்டியைப் பெற்றுடையீர் என்கிறது. இவ்வடிக்கு உரை எழுதும் முத்து சு. மாணிக்க வாசகன், பேயின் தொழிலை ஆள்பவரைப் பெற்றுடையவரே என்று அப்பர் பெருமான் இறைவனைப் போற்றுவதாகக் கூறுகிறார். பேயின் தொழிலாளும் இப்பெண்மணி யார்? பேய்களின் தலைவியா? சிவபெருமான் இவரைப் பெற்றுடையவர் எனில், இப்பெண்மணி சிவபெருமானின் திருமகளா? - முத்து சு. மாணிக்கவாசகன், பேய் ஊர்தி உடையாள் ஒரு பெண் விநாயர்க்குத் தங்கை முறையிற் கொள்ளப்பெறும் வரலாறு உண்டு' என்று விளக்கம் தருவதுடன் தம் விளக்கத்திற்குச் சான்றுகளாக நம்பியாண்டார் நம்பியின் திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை (பதினோராம் திருமுறை, சைவ சிந்தாந்தப் பெருமன்றம், 1990, பக் 276-79)யிலிருந்து இரண்டு பாடல்களை முன் வைக்கிறார். இவ்விரண்டனுள் நான்காம் பாடல், பேசத் தகாதெனப் பேயெரு தும்பெருச் சாளியும்என் றேசத் தகும்படி ஏறுவ தேஇசை யாதமுக்கட் கூசத் தகுந்தொழில் நுங்கையும் நுந்தையும் நீயும்இந்தத் தேசத் தவர்தொழு நாரைப் பதியுட் சிவக்களிறே.' என அமைந்துள்ளது. - 50 இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005