பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல் நிலம் 125

அாள்து.ாளாகக் கிழித்துவிட்டு வெளியேறித் தப்பிவிட்டது. பரதவர் என்ன செய்வர்? பாவம் !” எனக் கூறி மீன் பிடிக்கும் தொழிலின் கொடுமையினே எடுத்துக் காட்டினுள் ஒருத்தி.

‘ தெண்கடல் -

வன்கைப் பரதவர் இட்ட செங்கோல் கொடுமுடி அவ்வலே பரியப் போகிக் கடுமுரண் எறிசுரு வழங்கும்.” 1 அவள் கூறியன கேட்டாள் மற்றாெருத்தி , அவள் அப் பரதவர் குலத்தில் பிறந்தவள். கருமீன் வேட் டைக்குச் சென்ற பரதவரின் குடியில் வந்தவள். தன் சுற்றத்தாரின் தோல்வி கேட்டு வருந்திற்று அவள் உள்ளம். அவள் கூறியதை ஏற்றுக்கொண்டாளல்லள் ; தன் உறவினராய பரதவர் ஆற்றல் அவள் அறிவாள் ; அதனுல், எடி பெண்னே வலிய வலையையும் கிழித்துக்கொண்டு சுரு ஒடிவிட்டது என்பதை நான் ஒஏற்றுக்கொள்கிறேன். அது எங்கள் தொழிலில் இயல் ‘பாக நிகழ்வது. ஆனால் அதல்ை எங்களவர் ஏமாற்றம் அடைதலோ, உள்ளம் உடைந்து சோர்ந்து விடுவதோ இல்லை. சுரு, ஒரு முறை ஒடிவிடுவதைக் கண்டவுடனே அவர்கள் ஆற்றல் அதிகமாம் ; அதைப் பிடிக்கும் ஆர்வமும் மிகும். முன்னினும் மிகுதியாக முயன்று அச் சுருவை அகப்படுத்துவர். அதைக் கைப்பற்றாது மீன் வேட்டையில் வேண்டுமளவு வெற்றி கிட்டாமுன் எங்க ளவர் கரை ஏருர் ; இது உறுதி ‘ என்று கூறிப் பாதவ ரின் பேராற்றலைப் புலப்படுத்தினுள்.

1. நற்றிணை 808 மதுரை ஆருலவிய காட்டு ஆலம்பேரி சாத்தனுர்.

வன்கை-வலிய கை, கொடுமுடி-வலித்துக் கட்டிய முடி பரியதுள் தூளாகக் கிழிய, போகிய- தப்பிப் பிழைத்த. கடுமுரண்-கொடிய கோபம் மிக்க, எறிசுரு-கொல்லும் கரு. . . . . . .