பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/230

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
194


இரண்டும் மணமுள்ளவை. கழுநீர் இரண்டற்கும் பொது. குவளை செங்கழுநீரி, எனப்படும். "தண்கயக் குவளை' -என்னும் அடிக்கு நச்சர் செங்கழுநீர்ப்பூ என்று உரை எழுதினார். எனவே, குவளையில், செம்மை நிறங்கொண்டது செங்கழுநீர் எ ன ப் பட்டது. ஆம்பலிலும் செம்மை நிறமிருந்தும், அதிலும் அரக்குச் செம்மை இருந்தும் அது செங்கழுநீர் எனப் பெயர்பெறவில்லை. குவளை, தான் செம்மைக் குறியுடன் செங்கழுநீர் எனப்பட்டமை அதற்கொரு. சிறப்பிருப்பதைக் காட்டுவதாகின்றது. அச்சிறப்பைப் படிப் படியாகக் காணவேண்டியுள்ளது. ஆம்பலும் குவளையும் குறிக்கத்தக்க மணம் கொண்டவை. திருமண இல்லம் மணம் கமழ்வதுபோன்று ஆம்பல், மணம் கமழும் என்று, - "ஆம்பல் மண இல் கமழும்"2 -எனப் பழமொழி குறித்தது. 'குவளை நாறும் குவை இருங்கூந்தல்'3 -எனக்கூந்தலுக்குக் குவளை மணம் ஏற்றுவதையும் காண்கின்றோம். இரண்டிலும், “கார்த்திகை விளக்கன்ன கடிகமழ் குவளை' என்று மிகுந்த மணமாகவும், "குவளை அரும்புபடு பன்மலர் திறந்து மோந்தன்ன சிறந்து கமழ் நாற்றத்து" எனச் சிறந்து கமழ்வதாகவும் குவளை குறிக்கப்படுகின்றது. எனவே, மனத்தில் ஆம்பலைவிடக் குவளை மேம்பட்டது, இவ்விரண்டையும் அடுத்தடுத்து வைத்து, “தொடர்ந்த குவளை துரநெறி அடைச்சி அலர்ந்த ஆம்பல் அகமடி (பதிற் : 27 : 2, 3) எனப்பாடினார் பாலைக்கெளதமனார். குவளைக்குத் "தொடர்ந்த” என்னும் அடைமொழிஅமைத்தார்.இை தவிளக்கும்பழையஉரைகாரர். குறி. பா: 88 உரை, : 4 ۶اي .نه : zs3 | 2 பழ :144 . . . . 5 மது. கா : 586, 587, 8. குது : 300 ーエ •