பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/242

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
206


காட்டுகின்றது. அழுகைக்கு உவமையான இக்குழல் இசையே போரில் புண்பட்டுப் படுக்கையில் துன்புறும் வீரர் கு அமைதி யைத் தரும் என்பர். போர்ப் புண்ணைப் பேய் சுவைக்கச் சுற்றும் என்பது ஒரு நம்பிக்கை. அவ்வாறு பேயை அணுக விடாமல், 'ஐயவி சிதறி ஆம்பல் ஊதிக் காக்கம் வம்மோ தெடுத்தகை புண்ணே' -என அரிசில் கிழார் பாடியுள்ளார். ஆம்பல், இசை காதலன் காதலி களவாகக் கூடுவதற்கு அறிவிப்பாகவும் பயன்படுத்தப்பட்டது. இன்ன இடத்தில் வந்து விடு' என்று இடத்தைக் குறித்தற்கு குறி யீடு' என்று பெயர் தலைவன் ஓரிடத்தில் நின்று இக்குழலை ஊதுவான். இசை வரும் திக்கைக்கொண்டு காதலி இடத்தைப் புரிந்துகொள்வாள். ஒரு வன் காஞ்சி மரத்தடியில் நின்று ஊதி இடம் அறிவிக்கின்றான். "ஆம்பற் குழலாற் பயிரெம் படப்பைக் காஞ்சிக் கீழ்ச்செய் தேம் குறி'? இக்காலத்தில் தமிழகத்தில் ஆம்பல், குவளை முதலிய சொற்கள் மாந்தரது வாய்ப்பேச்சில் இல. அல்லி என்னும் வழக்கே உள்ளது. கவிஞர் ஒமர் என்பார் இதனை அழகுபடப் பாடியுள்ளார். அழகிய மங்கையாக வண்ணித்துள்ளார். அதற்குக் காரணம் மேலைநாட்டு மரபில் இம்மலர் எழில் மங்கையாகவும், தேவ மகளாகவும் கருதப்படுவது. நாம் கூறும் அரமகள், அணங்கு, பாவை என்னும் சொற்பொருள் அமைப்பில் இம்மலரை மேல் நாட்டார் போற்றினர். இவ்வழக்கம் நமது நிழலோ என்று கருதும் அளவில் நம் நாட்டிலும் அல்லியைச் சொல்கின்றோம். பெண்ணாக - பாவையாகச் சொல்லும் தமிழ் வழக்கு உண்டு. வடமொழிக் கதையில் வரும் அருச்சுனன் மனைவியருள் ஒருத்தி அல்லி எனப்படுவாள். நம் தமிழகத்தில் அல்லிப்பாவை' என்றொரு வழக்கு உண்டு. கண்டாரைத் தன் கவர்ச்சி அழகால் கொல்லுவது போன்று மயக்கும் அழகுப் பொம்மை ஒன்றிற்குக் கொல்லிப்பாவை’ என்றுபெயர். இப்பாவை அமைந்தமலை கொல்லி t 2ళ 108:42, 68,