பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

357


ஆனால், கவிஞர்தம் கண்ணில் பட்டுக் கருத்தைத் தொட்ட மலர், இளமை நலங்குன்றாத கொல்லிப்பாவை ஆகிவிடும். புலவர்தம் ಟ್ತನ್ಡಿ புணர்ந்து, உளத்தில் கருப்பெற்று, நாவில் புதுப் பிறப்பெடுக்கும். ஒகோ’ என்று உயர்விடம் பெற்றுச் சாகாக் கலை பெறும். இலக்கியத்தில் மலர்ந்து, இவ்வுலகம் வாடினாலும் தான் வாடாது மணக்கும். இவ்வாறு, உலக இலக்கியங்களில் இடம் பெற்ற மலர்கள் இன்றும் மலர்ச்சி குன்றாது மணக்கின்றன. உணர்ந்து சொன் ாைல், மலர் இல்லாத இலக்கியம் கைம்பெண் இலக்கியம் எனலாம். மாந்தர், தன்னைக் கைம்பெண்ணாக்கியதற்குமலர் இலக்கியத்தைப் பழி வாங்குவதாகும் இது. தமிழ் இலக்கியங்கள் யாவும் மங்கல மடந்தையர். - மாந்தர் மலரைப் பயன்கொள்ள மணம், வண்ணம், வடி வெல்லாம் பார்த்துத் தேர்வு செய்வர். புலவர் பார்வையில் எல்லாம் ஒன்றே; ஏதும் இல்லாது போனாலும் நன்றே. முல்லையில் வைத்த மனத்தை முருங்கையிலும் வைப்பர், தாமரையில் தாவிய கண்களை தனக்கத்திலும் தாவவிடுவர். நெய்தலைப் பாடிய வாய் நெருஞ்சியையும் பாடும். அனிச்சத்தை மோந்தஎழுத்தாணிஅழிஞ்சிலையும் மோக்கும். அல்லிமேல் ஒடிய எழுத்து கள்ளிமேலும் ஒடும். எப் பூவானால் என்ன? வெந்தயப் பூ எச் சிறப்புடையது? ஒருநாள் பாவேந்தர் பாரதிதாசனார் கண்ணில் பட்டு விட்டது; தங்கமாகிவிட்டது.

  • வெந்தயச் செடிகளின் மேல்

மின்னிடும் தங்கப் பூக்கள்” என்றார். மன்னரது போர் வலிமையைக் குறிக்க, " தி, தயந்து நோக்கும்வாய் பொன் பூப்ப " என்பர். கவிஞர் நயந்து நோக்கினால் பொன் பூக்கின்றது. 1. அழகின் சிசிப்பு: சிற்றுார் : 4