'இகெனோபோ என்று பெயர். மக்களது ஆர்வத்தால் இப் போது சப்பானில் இகெனோபோக்கள் 3000 அளவில் நடை பெறுகின்றன. இவ்வெண்ணிக்கை கொண்டு அவர்களது மலர்க் கலையின் ஆர்வத்தை உணரலாம்.
மேலும் இக்கலையைக் கற்பிக்கக் கல்லூரி அளவில் 'சொகெட்சு" எனப்படும் கலைக்கூடம் ஒன்று தோக்கியோ நகரில் உள்ளது. -
இக்கல்வியில் மலரடுக்கல், கோத்தல் வரிசைப்படுத்தல், கட்டல், கொத்தாக்கல் முதலியவற்றோடு தாழி, தொட்டி, கலை வட்டில், கலைப்பானை முதலியவற்றில் பூக்களை இலை தழை களுடன் பார்வையாக அமைத்தலும் இடம் பெற்றது.
தாழிகளில் இவ்வாறு மலர்ச்செடிகள், கொடிகளை வளர்க்கும் பழக்கம் நம் தமிழகத்திலும் உண்டு என்பதை,
"தாழிக் குவளை வாடு மலர் சூட்டி' ே "தாழியும் மலர் பல அணி பா’ 37 -என்னும்
அகநானூற்றுப் பா அடிகள் சுட்டிக்காட்டுகின்றன, இவை இக் காலத்தில் 'குரோட்டன்சு எனப்படும் கலைச்செடி வளர்ப்பாகும்.
நமது தமிழகத்தில் இஃது ஒரு கலையாகவும் இப்போது சப்பானில் வளர்ந்திருப்பதுபோன்ற கல்வியாகவும், சான்றிதழ் பெறுவதுபோன்று தேர்ச்சி பெற்றுப் பெயர் பெறுவதாகவும் இருந்ததை இலக்கியங்கள் காட்டுகின்றன.
கலையரசி மாதவியின் மகள் மணிமேகலை இசைக்கலையும் நாட்டியக்கலையும் பயின்று அரங்கேறினாள். இவற்றுடன் மேலும் பல கலைகளையும் பயின்றவள். அக்கலைகளுள்,
'வட்டிகைச் செய்தியும், மலராய்ந்து தொடுத்தலும்
கோலங் கோடலும் கோவையின் கோப்பும்
கற்றுத் துறையோகிய பொற்றொடி நங்கை'88 -என மலரைத் தேர்ந்து கண்டு, ஆய்ந்து தொடுக்கும்.கலை ஒரு பயிற்சிக்
88 அகம்: 185: 11,
87 அகம்: 889: 8 - 88 மணி : ஊரலர் உரைத்த காதை : 83
பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/55
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
19
