பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/573

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
553

இக்கருத்தாலேயே பெயர் பெற்றவர். 'தும்பிசேர் கீரனார்' என்பது அவர் பெயர். பீரத்தில் மணமில்லாததால் உடலில் படர்ந்த பசலையை ஊதுமாறு கூறியது ஏன்? அதுதான் இப்பீரத்திற்கே உள்ள இலக்கியச் சிறப்பு. காதலனைப் பிரிந்த காதலி அப்பிரிவால் உள்ளம் தொய்வுற்று உடலும் தேய்வாள். அதன் அறிகுறியாக உடலில் மலர் மலராகத் தேமல் படரும். அது நெற்றியில் பளிச்சென்று தெரியும். அதன் சுற்று வடிவமும், பொன் நிறமும் பீர்க்கம் பூப் போன்று தோன்றும். ஊரார் அலர் உரைப்ப அதன் தாக்கு தலாலும் காதலி இதைப் பெறுவாள். இதனால் உடல் பசந்து தோன்றுவதால் பசலை” எனப்படும். 'ஊரலர் தூற்றும் உய்யா விழுமத்துப் - பீர் அலர் போலப் பெரிய பசந்தன” (கலி : 149 :48, 49) 4 & تاهق تق لقي .................. பீர் இவர் மலரிற் பசப்பூர்ந் தனவே' (நற் : 197 : 1, 2) இப்பசலை அக இலக்கியத்தில் இன்றியமையாத ஒன்று. அதற்கு இப் பூ இன்றியமையாத உவமை. இவ்வொன்றை உயிராகக் கொண்டே இப் பூ இலக்கிய வாழ்வில் நிற்கின்றது. இம்மலர் அழகுதான். இவ்வழகு மகளிர் நெற்றியில் ஊரு மானால் நெற்றியின் அழகு மாறும். நல்லந்துவனார், இதனை, “... - . ... ... நறுதுதல் பிரலர் அணி கொண்டு பிறைவனப்பு இழந்தது - என்றார் பசலைக்கு உவமை பீர் என்பது நிலைத்ததாயிற்று, பசலை என்பதன் குறியீட்டுச் சொல்லாகப் பீர் அமைந்தது. ஒரு பெண் உடலில் பசுப்பு தங்கியதை, 1. கலி ; 58 : 14, 15,