பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/582

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

562


வாய் என்னும் தொடர்பு கொண்டு பதிற்றுப்பத்தில் (81 22) பெருவாய்மலா” என்றதை இவ் இருவாட்சியாகவும் கூறினர், இவற்றுள் இருவாட்சி என்பதைமட்டும் இலக்கியங்களில் காணலாம். அவற்றுள்ளும் சங்க இலக்கியங்களில் இச்சொல் இல்லை. காப்பியங்கள். தேவாரம் முதலியவற்றிலும் இப்பெயர் இல்லை. பெரியாழ்வார் பாடியுள்ளார். நிகண்டுகளில் இருவாட்சி உள்ளது. நிகண்டுகளால் இதன் இயற்பெயரை அறிய முடிகின்றது. 'மருமேவும் இருவாட்சிக்கு மயிலையும் அநங்கமும் பேர்'2 - என்று சூடாமணி நிகண்டு குறிக்கின்றது. சேந்தன் திவாகரம் அநங்கத்தைக் குறிக்கவில்லை இவ்வாறு குறிக்கும் நோக்கில் நிகண்டுகள் ஒரு தவறு செய்துள்ளன. இருவாட்சி' என்பது இதன் இயற்பெயர் போன்றும் மயிலை மறுபெயர் போன்றும் குறிக்கின்றன. இஃது உண்மையன்று என்பதை மயிலை' என்னும் சொல்லாட்சி புலப் படுத்தும். இருவாட்சி' என்னும் சொல்வழக்கு சங்கப் பாடல்களில் இல்லாமையும் பிற்காலத்தவரால் அருகியே கையாளப்பட்டமை யும் கண்டோம். மயிலை, சங்க இலக்கியங்களில் பெரும் ஆட்சியாக இல்லாது போயினும் புறநானூற்றில் ஒரிடத்தில் இடம் பெறுள்ளது. தொடர்ந்து, 'மயிலையும் செயலையும்'8 - என மணிமேகலை முதல் அனைத்துக் காப்பியங்களிலும் திருவிளையாடற்புராணத்திலும் சிற்றிலக்கியங்கள் சிலவற்றிலும் மயிலை பேசப்பட்டுள்ளது. இவ்வாறு பரவலாக இடம்பெற்றுள்ளமையாலும் மயிலை' என்னும் சொல் இடுகுறிப்பெயராக உள்ளமையாலும் இஃதே இயற்பெயராகும். நள்ளிருள் நாறி' என்பதன் மொழிமாற்றாக அமைந்த இருவாட்சி எவ்வாறு இயற்பெயராக முடியும்? அவ்வாறாயின் 'நள்ளிருள் நாறி” என்பதும் காரணச் சிறப்புப் பெயர்தானே. அச்சொல்லால் ஏன் கபிலர் குறிஞ்சிப் 1 செண்பகம் மல்லிகை யோடு செங்கழுநீ இருவாட்சி எண்பகர் பூவும் கொணர்ந்தேன் -பெரி, தி : 2 : 7 ; 10. 2 குடா நி, மரப்புெயுச் 8 8 ழனி : 24 : 89,