பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23


கோட்பாட்டிலும் மலர், சைவத்தின் முழுப்பொருள். வழக்காற்றில் மட்டுமன்று, வரலாற்றிலும் மலர் முதற்பொருள். உவமையில் மட்டுமன்று, உள்ளுறையிலும் மலர் உறவுப்பொருள். "சித்தத் தெளிவிர்காள்! அத்தன் ஆருரைப் பத்தி மலர்தூவ முத்தி யாகுமே: -என்று ஒரு மலரால் ஆன்ம இயலின் முழுப்பயனாம் வீடுபேற்றையும் பெற வைக்கின்றார் திருஞானசம்பந்தர். வளைத்துப் பிடிக்கும் வல்லமை கொண்ட வன்தொண்டரோ, 'தார்மலர்ப் பூசையில் சிக்கும் இறைவன்’40 -எனப் "பூமாலையாம் வலையால் சிவனைச் சிக்க வைக்கலாம்: என்று வழி சொல்கின்றார். அப்பரோ, "பூத்தானுமாய் பூவின் நிறத்தானுமாய் பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற (ξαή "41 -எனப் பூவாகவே சிவனைக் காட்டி அதன் நிறமாகவும், மணம்ாகவும் அவனைப் பொருத்துகிறார். உயிர்-இறைக் கோட்பாட்டைத் தெளிவாக்குவதற்கு நினைத்த திருமூலர், "பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல் சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது’’42 என்று பூவை உவமையாக்கித் தெளிவுபடுத்தினார். அத்தெளிவினுல் சிவமணம் பூத்தது” என்று சிவனை மணமாகவும் பூத்ததாகவும் அமைத்தார். சைவத்திற்கு அடுத்த நிலையில் வைணவம் எனப்படும் திருமாலியம் பூவிற்கு இன்றியமையா இடத்தை வைத்துள்ளது. விடு பேற்றிற்கும் வித்து’ எனப் பூவைக் காட்டும் நம்மாழ்வார், " நாடீர் நாடோறும் வாடா மலர்கொண்டு பாடிர் அவன் நாமம் வீடே பெறலாமே"43 -எனப் பாடுகின்றார். 39 ஞான. தே: ஆருர்ப்பதிகம்: 1 42 திருமந்: 1459 --- ----- 40 சுந்: தே: நின்றியூர்ப்பதிகம். 8 48 திரு வாய்: கண்ணன் கழலினை: 5 41. அப், தே: கருகாவூர்ப் பதிகம்: 8 - - * ・,