பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/601

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



24. தேர்க்கால் மலர்,

வகுளம்.

மணங்கமழும் மலர்களில் மகிழம் பூவின் மணம் மகிழ்வைத் தருவது. மகிழம் பூத்தால் கம்மென்று இனிமை தவழும். "மகிழ் இனிது கந்தம்” என இனிதாகக் குறித்தது பொருத்தமானதே. 'மகிழைத் தருவதால் மகிழம் என்று நயமாகக் கூறலாம். ஆனால், மகிழம் என்னும் சொல் வகுளம்' என்பதன் மரூஉ.மொழியாகும். குறிஞ்சிப்பாட்டு (70), பரிபாடல் (12 : 79), திணைமாலை நூற்றைம்பது (24) ஆகிய மூன்று சங்க இலக்கிய நூல்களில் மட்டும் ஒவ்வோரிடத்தில் வகுளம் வந்துள்ளது. தொடர்ந்து காப்பிய ஆசிரியர், தேவாரத்தார், புராணத்தார், சிற்றிலக்கியத்தார் எனப் பலரும் வகுளத்தைக் கையாண்டுள்ளனர். பரிபாடலின் திரட்டுப் பாடல் ஒன்றில் மகிழம் அமைந்துள்ளது. அஃது அக் காலத்திலேயே இவ்வாறு மருவியதன் அறிகுறியாகலாம். அன்றி வகுளம்' என்பது இந்நூாவில் மகிழம்' என மாற்றப்பட்டிருக்கலாம். சேந்தன் திவாகரம் வகுளம் இலஞ்சி மகிழ்மர மென்ப’ என வகுளத்திற்கு இருபெயர்களை அறிவித்தது. பிற நிகண்டுகள் "கேசரம்' என்னும் வடசொல்லை அறிவித்துள்ளன. இவற்றுள் "இலஞ்சி' என்னும் சொல்லைத் திருவிளையாடற்புராணம் கை யாண்டுள்ளது. கம்பரும் கையாண்டுள்ளார். 'மகிழம் என்னுஞ் சொல் உரையாசிரியர்களால் வகுளத்தின் பொருளாகக் காட்டப் பட்டுள்ளது. பரவலாக இடைக்காலப் பிற்கால இலக்கியங்களிலும் இடம பெற்றுள்ளது. மொழி முதலில் வகரத்திற்கு மகரம் போலியாக வழக்கில் அமையும். விழித்தான்' என்பதை முழித்தான்’ என்பர். இது போல் வகுளம்-மகுளம் ஆயிற்று. எகரத்திற்கு ழகரம் ஈடு கொடுத்து வரும். பவளம், பவழம் எனப்படும். இவ்வகையில் மகுளம்-மகுழம் ஆயிற்று. 'மகுழம்' என்பதன் வாய்ப்போக்கு மாற்றம் மகிழம் ஆயிற்று. இக்காலத்தில் மகிழம்' என்பதே யாவருக்கும் புரியும் நிறைவழக்காக உள்ளது. வகுளம் மரவகை, குறிஞ்சி நிலத்தில் தினை விதைப் பதற்காக, - 1 “த்ாதவிழ் மல்லிகை முல்லை இலஞ்சி தடங்கோங்கம் -திரு, பு : க்ருமி 3