பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/736

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
716


கதிரை ஒரு மடல் மூடியிருக்கும். இம்மடல் விரிந்து விலகுவதே பூவின் மலர்ச்சியாகும். இம்மலர்ச்சியின்போது முதலில் இளம் பசுமை நிறம் தோன்றும். மலர்ச்சியின் வளர்ச்சியில் அதன் காரகங்கள் கரு மஞ்சள் நிறத்தில் தோன்றும். இந் நிறத்தையே பலாப் பூவின் நிறம் என வேண்டும். இம்மலர்ச்சியின்போது கம்மென்று மணம் கமழும். இஃது அழுத்தமான மணமே. இப்பலாவில் பலா, வருக்கை, ஆசினிப் பலா, குரங்குப் பலா எனப் பலவகை உள. பலா மரத்தின் இப்பூ (பிஞ்சு, காய், கனி) வேரிலும் தோன்றும்; அடிமரத்திலும் தோன்றும்; கிளை களிலும் தோன்றும். தோன்றும் இடத்திற்கேற்ப இதன் பழம் சூலடிப் பலா, வேர்ப்பலா, கோட்டுப் பலா எனப்படும். சில பலாக்களில் வேர், அடிமரம், கிளை ஆகிய மூன்றிடங்களிலும் தோன்றும். இதனையும் உறையூர் சிறுகந்தன் என்பார், "வேரும் முதலும் கோடும் ஒராங்கு தொடுத்த போலத் துரங்குபு (அசைந்து) தொடரிக் கீழ்தாழ் வன்ன வீழ்கோட் பலவு'! என்று பாடிக்காட்டினார். "நெடுவரை முடவு முதிர் பலவு' (நற் : 352 : 4) :பனிவரை நிவந்த பாசிலைப் பலவு’ (புறம் : 200 : 1)

பலா அமல் அடுக்கம்' (அகம் : 8 :7) -

"சாரல் பலவு' (ஐங் : 214) என்றெல்லாம் பலா, மலை மரமாகக் கண்டு பாடப்பட்டுள்ளது. கொல்லி மலையும் நாஞ்சில் மலையும் பறம்பு மலையும் பலாவிற்குச் சிறந்தவை. குறிஞ்சி திரிந்த பாலையின் பாதையிலும் பலா உள்ளமையால் அத்தப் பலவு" (ஐங் 351) எனப்பட்டது. ஆயினும் இது குறிஞ்சி நிலத்தது, இடத்திற்கேற்பவும் இனத்திற்கேற்பவும் இது சில பருவங் களில் தோன்றுவதாயினும் 'கார்கோள் பலவின் காய்த் துணர்"2 என்றபடி கார்ப்பருவத்திலும், 'கோடைக்கு ஊழ்த்த கமழ் நறுந் திங்கனி" என்றபடி கோடைப்பருவத்திலும் காய்த்துப் பழுக்கும். இத்தொடர்பில் இதன் பூ இளவேனிற் பருவத்தில் தோன்றும் என்று கணிக்கலாம். - 1 குறு 257 : 1-3 * ••ü : 848 ; 3 2 மலை 12