பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

23


அழகான வார்த்தைகளைப் பெய்து, அற்புதமாகப் பாட்டுகளைப் பாடுவதில், ஒளவைப்பாட்டி கெட்டிக் காரியாகவே திகழ்ந்திருக்கிறாள்.

அவள் பாட்டுகள் அத்தனையும் எளிமையிலும் எளிமை. இனிமையிலும் இனிமை. அருமையிலும் அருமை. அவையே, தமிழுக்குப் பெருமையிலும் பெருமையாக இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கின்றன.

உலக வழக்கத்தைச் சொல்வதிலும் மனிதப்பழக்கத்தைச் சொல்வதிலும் மட்டுமே ஒளவை தலைவியாகத் திகழவில்லை! மனித ஒழுக்கத்தை வளர்ப்பதிலும், செழிக்க வைப்பதிலும் மிகுந்த சிரத்தை கொண்டிருக்கிறாள்.

'நேர்பட ஒழுகு' 'நிலையில் பிரியேல்' 'நூல் பலகல்’ 'மோகத்தை முனி' என்று, வாக்கியம் ஒன்றிலே வாழ்க்கையை வடித்துக் காட்டியிருக்கிறாள் எழுத்தரசி ஒளவைப்பாட்டி.

அந்தப் பாட்டுகளிலே, மனித ஒழுக்கமே மகோன்னத ஒழுக்கம் என்பதைச் சுட்டிக் காட்டி, ஒழுக்கமான வாழ்வே உன்னதமான வாழ்வைத் தருகிறது என்ற உண்மையை உணர்த்திக் காட்டி, உலகைத் திருத்தியிருக்கிறாள்.

ஆனமுதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டு-போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லானாம் நாடு.

என்பது ஒரு பாடல்.