பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

25



அதாவது, உயர்ந்த சிந்தனையாளர்களிடமும், அரசாங்கச் செய்திகள் பற்றிய இடங்களிலும், முதலைக் குறிக்க வந்த இடங்களில், உடல் என்றே குறித்துக் காட்டும் சிறப்பு அமைந்திருந்திருக்கிறது.

அந்த சொல் பொதுமக்களிடையே புகவில்லையோ என்னவோ?

நாம் இந்த முதல் என்ற சொல்லுக்கு உடல் என்று பொருள் கொண்டு, இந்தப் பாடலுக்குரிய முழு அர்த்தத் தையும் விரிவாகக் காண்போம்.

புதிய அர்த்தம்:

நம் வாழ்க்கைக்கு முதலாக விளங்குகிற தேகத்தை, சரியாகக் காத்துக் கொள்ளாமல், அதிகம் செலவழித்து விட்டால், தேகம் நலிந்து, தேய்வுற்று, திணறி, நலிந்து, நோய்களுக்கு ஆளாகி அவதியடையும். அப்பொழுது, அந்தத் தேகத்திற்குரியவனுக்கு மானம் இருக்காது. மரியாதை கிடைக்காது. நல்லவனாக வாழ முடியாது. எல்லார்க்கும் ஏற்றவனாக வாழ முடியாது. அவன் அந்தப்பிறப்பில் தீயவனாக, தீய்ந்தவனாக மாறிப் போகிறான் என்பது தான் நாம் கூறுகிற புதிய அர்த்தம்.

உடல் நலமாக இருக்கிறவரை, உயர்ந்த அளவில் பலத்துடன் திகழ்கிறவரை, உலகில் எதிர் நீச்சல் போடுகிற வல்லமை தருகிற வளத்தோடு இருக்கும்வரை மனிதனுக்கு மரியாதை உண்டு. அவன் மனதிலும் தன்னம்பிக்கை உண்டு. தளராத செயலாக்கம் உண்டு.

அதனால்தான், செல்வத்தைக் காப்பதுபோல், பொருளைப் பத்திரப்படுத்துவதுபோல், உடலைப் பாதுகாக்க வேண்டும் என்கிறார்கள்.