பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141

141

தலைவன் பயணம் செல்லும் வழியில் புறக்காட்சிகளில் வறட்சி தோன்றிலுைம், அங்கிலத்தில் வாழும் உயிரினங்: களின் வாழ்வில் அன்பின் உயிர்த் துடிப்பைக் காண்பான். வறட்சிக் கிடையே ஒரு மலர்ச்சி; கொடிய வெம்மைக் கிடையே தண்ணிய தன்மை. புறக் கொடுமைக் கிடை யில் மனத்தின் மகிழ்ச்சி கிறைந்த குளிர்ச்சி. இவை உயிர்களின் அன்டான-அமைதியான காதல் வாழ்வினைப் படம் பிடித்துக் காட்டும் புறச் சூழ்நிலைகள். இய்ந்த கொடுமை மிகுந்த காட்சிகளே வழங்கினும் அப்புறக் கொடுமையும் வெப்பமும் அவ்விளைய நெஞ்சங்களில் சுரக்கும் அன்புக்கு அணைபோட முடியாது என்பதனைப் பல பாடல்களில் சங்ககாலக் கவிஞர்கள் குறிப்பிட்டுள் ளனர்.

கொடுமை கிறைந்த புலிகளின் வாழ்விலும் வறண்ட பாலையில் வற்றாத அன்பு நிலவுவதனை ஒளவையார் அகநானூற்றுப் பாடல் ஒன்றால் விளக்கிக் காட்டி யுள்ளார்.

குகையின் பிளப்பின் ஓர் முடுக்கான இடத்தில் மூன்று குட்டிகளை ஈன்றது பெண் புலி. குட்டிகள் வேங்கை மரத்தின் மணமுள்ள மலர்களோடு உள்ள தழையைத் தனித்தனியே வகுத்தாற் போன்று காட்சி யளிக்கின்றன. வளைந்த நகங்களைக் கொண்ட குட்டிகளே ஈன்ற தாய்ப்புலி ஈன்ற இளைப்பாலும் பசியாலும் மிகவும் துன்புற்றுக் காணப்படுகிறது. அதனை யறிந்த ஆண் புலி, பெண் புலியின் பசியைப் போக்க இரை தேடி வரச் செல்ல கினைந்து, எங்காவது ஆண் மானின் குரில் கேட்கின்றதா என்று ஆர்வத்தோடு கவனமாக உற்றுக் கேட்கின்றது.

வேங்கை வெறித்தழை வேறுவகுத் தன்ன ஊன்பொதி அவிழாக் கோட்டுகிர்க் குருளை