பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143

143

அன்பால் பின்னப்பட்ட அருள் நெஞ்சங்கள் மாருமல் துலங்குகின்றன. ஆண் பருந்து தன் விரல்களால் பிணங் களின் கண்களைப் பெயர்த்துப் பெண் பருந்தின் வாயில் இட்டு ஊட்டி மகிழ்கின்றது. வற்றிய பாலையிலும் வள மார்ந்த நெஞ்சம் கொண்ட பருந்துகளின் இடையே மலர்க் துள்ள இவ் அன்பு வாழ்க்கையினே இறங்குகுடிக் குன்ற காடன் என்னும் அகநானூற்றுப் புலவர் அழகுறப் புனைந்து காட்டியுள்ளார்.

‘ கொடுமரம் பிடித்த கோடா வன்கண் வடிவில் அம்பின் ஏவல் ஆடவர் ஆளழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கைக் கூர்நுதிச் செவ்வாய் எருவைச் சேவல் படுபிணப் பைந்தலை தொடுவன குழீஇ மல்லல் மொசிவிரல் ஒற்றி மணிகொண்டு வல்வாய்ப் பேடைக்குச் சொரியும்.’ “ கள்ளி மரங்கள் கணக்கின்றி கிறைந்துள்ள பாலைக் காட்டிலே கரந்துறையும் ஆறலை கள்வர்கள் வழிப் போவாரைக் கொல்ல அம்பு முனைகளைத் தீட்டிக் கூர்மைப் படுத்தி, அக் கூர்மையின் சிறப்பினைக் காணத் தம் நகத்தின் முனையில் அந்த அம்புகளைப் புரட்டிப் பார்ப்பர். அந்த ஒசை யைப் போன்றே கள்ளி மரங்களில் உறையும் ஆண் பல்லியும் தன் பெண் துணையை அன்போடு அழைக்க மெல்ல அத்தகைய ஒலியினை எழுப்பும்.

“ பொன்புனை பகழி செப்பம் கொண்மார்

உகிர்நுதி புரட்டும் ஓசை போலச் செங்காற் பல்லி தன்துணை பயிரும் அங்காற் கள்ளியங் காடு ‘

14. அகதானுாறு : 215 : 9-15 15. குறுந்தொகை : 16 : 2,5