பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

237

237

மூல நூல்களையே அனைவரும் கற்று மகிழ்ந்த கிலே இருந்தது என்பதனைப் பேராசிரியர், தம் தொல்காட்பியப் பொருளதிகார மரபியல் உரையில், “உரையின்றிச் குத்திரத்தானே பொருள் நிகழ்ந்த காலமும் உண்டு என்பதாம்” என்றும், ‘உதாரணங் காட்டல் வேண்டா மையை உணர்ந்து உரைகடந்த காலமும் உடைய வாகும் முற்காலத்து நூல்கள் என்பது கருத்து என்றும் எழுதியுள்ள கருத்துக்கள் இக்கொள்கையினே வலியு; மறுத்துவனவாகும்.

தொடக்ககாலத்தில் எழுந்த உரைநூல்கள் சுருக்க |ЛГОЈГ முறையிலேயே அமைந்திருக்கக் காணலாம். *'un?nlı}oör பெருகும்; விரிவஞ்சி விடுத்தாம்; வந்த வழிக் காண்க; வல்லார்வாய்க் கேட்டுணர்க’ வான்றெல்லாம் உரையாசிரியர்கள் இடையிடையே எழுதியுள்ளமை கண்டு அக் காலத்தே எழுதுவதில் இருக்க இடர்ப்பாடுகளை ஒரளவு உணரலாம். செவிவழிச் செல்வமாக ஆசிரியர் மாணவர் பரம் பரையாக அறிவு வளர்ந்து வந்த காலத்தில் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் முறை வழக்கில் இருந்தது, அரிய சொற்களுக்குப் பொருளும், சொற்களைக் கொண்டு கூட்டி முடிக்கும் வகையும். ஒரு சில வரலாற்றுக் குறிப்புக்களையுமே தொடக்கத்தில் சுருக்கமாக உரையா சிரியர்கள் எழுதிவைத்தார்கள் எனலாம். ஐங்குறுநூறு, பMமப்பத்து. அகநானூறு முதல் தொண்ணுாறு: பாடல்கள், புறநானூறு. பெருங்கதை, சிலப்பதிகாரம் முதலியவற்றிற்கு முதற்கண் எழுந்த உரைகள் எல்லாம் சுருக்கமான முறையில் அமைந்த குறிப்புரைகளாகவே

தொ காப்பியம் ; மரபியல் 98 உரை கொல்காப்பியம்; மரபியல் 101 உரை