பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

பறையும், குறிஞ்சியாழும் இன்னிசைக் கருவிகள். இக் நிலத்திற்குரிய பண் குறிஞ்சியாகும்.

முல்லை நிலத்தில் வாழ்ந்தவர் ஆயர், ஆய்ச்சியர் ஆவர். இவர்கள் வழிபடு கடவுள் திருமால் ஆவர். வரகு, சாமை, முதிரை என்பன இவர்களது உணவுப் பொருள்களாகும். முல்லையாழும் சாதாரிப் பண்ணும், ஏறுகோட்பறையும் இவர்களுக்கு உரியவை. ஆனிரைகளை மேய்த்தல் இவர்களுடைய தொழில். ‘ஏறு தழுவுதல்’ என்ற வீர விளையாட்டு இவர்களுக்கே உரியது.

மருதநில மக்கள் உழவர், உழத்தியர் ஆவர். இவர்கள் இந்திரனை வழிபட்டனர். வெண்ணெல்லரிசியும், செங்கெல்லரிசியும் மருதநில உணவாகும். கிணை, முழவு, மருதயாழ் இந்நிலத்திற்குரிய இசைக் கருவிகள். இந்நிலத்துக்குரியது மருதப்பண். உழவுத் தொழில் செய்தல், புதுநீராடல், விழாக்கொண்டாடுதல் இந்நில மக்களின் தொழில்களாகும்.

பரதவர் நெய்தல்நில மக்களாவர். இவர்கள் வாழ்ந்த குடியிருப்புகள் ‘பாக்கம்’ என்றும் ‘பட்டினம்’ என்றும் பெயர் பெற்றிருந்தன. இவர்களுக்கு மீன் பிடித்தல் முக்கியமான தொழில். உப்பு விளைவித்து அதனை மருதநில நெல்லிற்கு விற்றலும், மருதநில நெல்லிற்குப் பண்டமாறு கொள்ளலும், மீன் உணக்கலும், மீன் விற்றலும், கடலாடுதலும் இவர்கள் தொழிலாகும். இவர்கள் ‘வருணன்’ என்ற தெய்வத்தை வணங்கினர்.

பாலை நிலத்தில் வாழ்ந்தவர் எயினர், மறவர் எனப் பெற்றனர். இந்நிலத்திற்குரிய தெய்வம் கொற்றவை. எயினர் வழிச்செல்வோரைத் துன்புறுத்திப் பொருள் பறித்து வந்தனர். துடி, பாலை யாழ் என்பன இந்நிலத்திற்குரிய இசைக்கருவிகள். இங்நிலத்திற்குரிய யாழ், பாலையாழ். இவர்கள் கொற்றவையை வழிபடும்