பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41



அல்ல என்றும். அறமே அடிப்படை என்றும்

பழந்தமிழர் கம்பினர். தீமை செய்தவர் அறத் தின் தண்டனையிலிருந்தும் தப்ப முடியாது என்று உறுதி பாக நம்பினர். போர்க்களத்திலும் அறத்தை மறவாமல் போற்றும் பண்பாடு தமிழரிடம் இருந்தது. ஓர் அரசன் பகை வேந்தன் காட்டின் மீது படை எடுப்பதற்கு முன் அங்காட்டிலுள்ள பசுக்கள், சான்றாேர், மகளிர், நோயாளர், மகப்பேறு எய்தாதவர்கள் முதலியவர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்திவிட்டுப் பின்னரே போர் மேற்கொண்டனர். இச்செந்நெறி ‘அறத்தாறு துவலும் பூட்கை மறம்” என்று போற்றப்பட்டது. போரில் புறங்காட்டி ஒடுவது பெருங் குற்றம் என்று அக்காலச் சமுதாயம் கருதியது. மகளிரும் வீர உணர்ச்சி பெற்றிருந்தனர். முதல் காள் போரில் தம் தந்தை யும், இரண்டாம் நாள் போரில் தம் தமையனும், மூன்றாம் நாள் போரில் தம் கணவனும் ஆண்மை யோடு போரிட்டு இறந்திருக்கவும் அது குறித்துக் கலங்காது மறுநாள் போரில் கலந்து கொள்ளத் தன் சிறு வயது பாலகனை அழைத்துத் தலையில் எண்ணெயிட்டு வாரி வெள்ளுடை அணிந்து போருக்குச் சென்று வருக என்று விருப்போடு அனுப்பிய வீரத்தாய்மார் தமிழகத்தே நிறைந்திருந்தனர். போரிலே பெற்ற திறைப் பொருள்களைப் பாணர், கூத்தர், விறலியர் முதலிய கலைஞர்களுக்குப் பரிசிலாகக் கொடுத்து மகிழும் வழக்கம் அக்கால அரசரிடையே இருந்தது. ஒத்த வீர முடைய பகைவர் அல்லாதவரோடு போர் புரிதலும், படைக்கலம் அற்றவரோடு போர் புரிதலும் ஆண்மைக் குறைவு என்று கருதப்பட்டது. முதுகில் புண்படுதல் மானக் குறைவாக மதிக்கப்பட்டது.

8. புறநானூறு 96. = 19. புறநானூறு : 279.