பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதிப்புரை

தினமணி சுடர் அநுபந்தம் 7-16-12-1973

இலக்கிய அணிகள்

(டாக்டர் சி. பாலசுப்பிரமணியன், பாரி நிலையம், 59, பிராட்வே, சென்னை-1)

இந்நூலில் இடம் பெற்ற 23 கட்டுரைகள் அனைத்தும் ஆராய்ச்சிப் போக்கில் எழுதப் பெற்றவை. நூல் முழுவதும் தமிழ் இலக்கண இலக்கியத்துடன் சிறப்பாகக் காணப்படும் பாடல்கள் மேற்கோளாகக் கையாளப்பட்டிருக்கின்றன. தமிழ், தமிழர் வரலாறு, தமிழர் சமயக் கொள்கை, உரைநடை ஆசிரியர்கள், வள்ளலார் கொள்கை, இளங்கோவடிகள் திறமை, மணிமேகலை, திருக்குறள், திருமுறைகள் மாண்பு, நூல் நெடுகிலும் பின்னிப் பிணைந்து கிடக்கிறது.

இவரது உரைநடையில் அழுத்தமும் கவர்ச்சியும் பிறருக்குத் தெரிய வேண்டிய அறிவு பூர்வமான சரக்குகளும் விரவி வருகின்றன. ‘வேம்பின் வெண் மலர்கள் பூத்துப் புதுமணம் கமழும் தென்னை மரங்கள் பசிய ஓலை விரித்துத் தென்றலில் தலை அசைத்துத் தீஞ்சுவை நீரினை இளநீராக வழங்கும். பனை மரங்கள் நுங்கினை வழங்கி மகிழ்விக்கும். மாஞ்சோலை எங்கும் ஒருவகைப் புதுமணமாம் பூக்களால் எழும்பும். மேடையெங்கும் பூங்காற்று வீசும். கோடையில் குளிர் தருக்களின் நிழல் இணையாற்றிக் கொள்ளுதற்கேற்ப விளங்கும்” என்று வர்ணனை செய்யும்போதும் ஆராய்ச்சி பூர்வமான அரிய பொருள்களைப் பெய்யும்போதும் செஞ் சொற் கவியின்பமும் கருத்து வளமும் பக்கத்திற்குப் பக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_அணிகள்.pdf/9&oldid=1314765" இலிருந்து மீள்விக்கப்பட்டது