உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

இலக்கிய அமுதம்


வதும் பரவியிருக்கின்றனர். அவர்கள் ஆங்காங்கு இருந்துகொண்டு இக்கலையைத் தம்மால் இயலும் அளவு வளர்த்து வ்ருகின்றனர். தமிழ் வளர்த்த மதுரையில் இவருடைய மாணவர்கள், சங்கங்களை அமைத்து நாட்கப் பயிற்சி அளிக்கின்றனர்; மதுரை, இராமநாதபுரம், திருச்சி மாவட்ட ஊர்களில் நாடகங் களை நடத்துகின்றனர்.

சங்கர்தாஸ் சுவாமிகளின் மாணவர்களாகிய டி. கே. சண்முகம் சகோதரர்கள் இன்றைய நாடகத் துறையிலும் நடிப்புக் கலையிலும் சிறந்து விளங்கு கின்றனர். அக்கலைக்கேற்ற ஒழுக்கமும் அவர்கள் பால் அமைந்துள்ளமை குறிப்பிடத்தகும். அவர்கள் நடித்துவரும் நாடகங்களுள் அவ்வையார், மனிதன், இன்ஸ்பெக்டர், இராசராச சோழன் என்பன குறிப் பிடத் தக்கவை. இவற்றுள்ளும் இராசராசசோழன் இணையற்ற நாடகமாகும். காண்பவர் உள்ளங்களைக் கொள்ளைகொள்ளும் மிகச் சிறந்த நாடகம் என்று இதனைக் கூறலாம். சோழர் வரலாற்றை அடிப்படை யாகக் கொண்டு வரையப் பெற்றுள்ள இந் நாடகம் மக்களுக்கு வரலாற்று உணர்ச்சியையும், பக்தியை யும் ஒழுக்கத்தையும் ஒருங்கே ஊட்ட வல்லது. இது போன்ற நாடகங்கள் பல வரையப் பெற்று நடிக்கப் பெறுதல் வேண்டும். நவாப் இராசமாணிக்கத்தின் குழுவினர் வள்ளி திருமணம், சம்பூர்ண இராமா யணம் முதலிய நாடகங்களை நடித்து வருகின்றனர். காலத்திற் கேற்ற சீர்திருத்தங்களைக் கொண்ட நாடகங்கள் பல இப்பொழுது பலரால் நடிக்கப்பட்டு வருகின்றன. என். எஸ். கிருஷ்ணன் குழுவினர், எம். ஜி. இராமசந்திரன் குழுவினர், எஸ். எஸ். இரச சேந்திரன் குழுவினர், கே. ஆர். ராமசாமி குழுவினர், கே. ஏ. தங்கவேலு குழுவினர், சிவாஜிகணேசன் குழு வினர் முதலியோர் பய்ன் தரத்தக்க நாடகங்க்ள் நடத்தி வருகின்றனர். -

கலேவாணர் என்.எஸ்.கிருஷ்ணள் அவர்கள் மறைக் தது ஈடு செய்யமுடியாத பேரிழப்பர்கும்.