பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் கண்ட கல்லமைச்சர் 9 வள்ளுவர் அரசியல் தொடர்பு வள்ளுவர் என்பார் அரச மரபினர் என்றும் அர சரைச் சார்ந்து அரசியல் பணியாற்றும் உயர்ந்த அலுவலாளர் என்றும் பழந்தமிழ் நூல்கள் பகரும். நாஞ்சில் நாட்டை வள்ளுவன் என்ற மன்னன் ஒருவன் ஆண்டான். அவன் நாஞ்சில் வள்ளுவன் எனப்படுவான். அம் மன்னன் மரபில் வந்தவர் எல்லோரும் வள்ளுவர் எனப்படுவார். அம்மரபில் பிறந்த பெரும்புலவரே திருவள்ளுவரும் என்பர் ஒரு சாரார். இனி, வள்ளுவர் என்பார் அரசரின் உட்படு கருமத் தலைவராய்ப் பணியாற்றியவர் என்பர் பிறி தொரு சாரார். எங்ங்னமாயினும் வள்ளுவர் என்னும் பழந்தமிழ்க் குடியினர் அரசியல் தொடர்புடையவர் என்பது உறுதியாகின்றது. அரசியல் நூலின் அமைதி அரசியல் தொடர்புடைய பழங்குடியாகிய வள் ளுவக் குடியில் தோன்றிய திருவள்ளுவர் சிறந்த அரசியல் ஞானியாகத் திகழ்ந்தார் என்று கொள்வதில் தவருென்றும் இல்லை. அவர் அருளிய திருக்குறள் ஓர் அரிய அரசியல் நூல் என்று கொள்வதும் பொருந்துவதொன்றே. ஆகவே அரசியல் ஞானி யாகிய திருவள்ளுவர் தம் நூலின் நடுவே பொருட் பால் என்ற பகுதியைப் புகுத்தியுள்ளார். வடுவிலா வையத்து மன்னிய மூன்றில் * கடுவண(து) எய்த இருதலையும் எய்தும் என்ருர் ஒரு பழந்தமிழ்ப் புலவர். அறம், பொருள், இன்பம் என்ற மூன்றனுள்ளே பொருளே அறமும் இன்பமும் அடைதற்குப் பெருந்துணை செய்வது.