பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் கண்ட அமைச்சர் 23 சுமந்திரன் மறுமொழி ‘அரசே! இராமன் அரசினை ஏற்பான் என்ற செய்தியைத் தெரிந்து இன்புறும் எங்கள் சிந்தையை, அரசினைத் துறந்து நீ வனம்புகுவாய் என்னும் செய்தி சுட்டெரிக்கின்றது. நின் குல முன்னேர் மறவாது புரிந்த அறத்தை நீ மறப்பதும் முறையன்று. அவ் அறத்தையும் கொடியது என்று கூறினல் செயத்தகும் அறந்தான் யாது? ஆதலின் நின் முதல் மகனுகிய இராமனுக்கு முடிசூட்டிப் பின் நீ விரும்பிய செயலைப் புரிவாய், என்று சுமந்திரன் மறுமொழி பகர்ந்தான். இங்ங்னம் உறுதி பயக்கும் உண்மைகளை அஞ்சாது உரைக்கும் உயர்ந்த அமைச்சர்களைத் தயரதன் பெற். றிருந்தான் என்று கம்பன் தனது காவியத்தில் பேசு கிருன்.