பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சர் அழும்பில் வேள் 35 வளம் படைத்தநாட்டின் தலைவராக விளங்கிய குறுநில மன்னர் அழும்பில் வேள். வானவிறல் வேள் அழும்பில் நாட்டுக் குறுநில மன்னராகிய வேளி னைத் தனக்கு அமைச்சராகக் கொண்ட செங்குட்டுவன், அவரது ஆற்றலைக் கண்டு வானவிறல் வேள்' என்று பட்டமளித்துப் பாராட்டினன். செங்குட்டுவன் அமைச் சர் அவையில் தலைவராக வீற்றிருந்த அழும்பில் வேள் சேரநாட்டின் செல்வத்தையும் செழிப்பையும் பெருக்கி ஞர். அரசின் வருவாயையும் பெருக்கிக் கருவூலத்தை நிறைத்தார். சேரன் மலைவளம் காணல் மலைவளம் படைத்த சேர நாட்டின் வருவாய்ப் பெருக்கைக் கண்ட செங்குட்டுவன் தன் நாட்டு, வளத் தைக் கண்டு களிக்கக் கருதின்ை. தேவ மாதருடன் விளையாட விரும்பிய தேவேந்திரன் தனது ஐராவதத் தில் ஏறி ஆரவாரத்துடன் செல்வது போன்று செங் குட்டுவனும் தன் பட்டவர்த்தனக் களிற்றின்மேல் அமர்ந்து பரிவாரங்கள் புடைசூழப் புறப்பட்டான். திருமாலின் மார்பிடையே திகழும் முத்தாரம் போன்று பல்வகை மரங்களால் அழகுடன் ஒளிரும் மலையினை ஊடறுத்துக் கொண்டு இழியும் பேரியாறு என்னும் ஆற்றங்கரையின் மணல் நிறைந்த மேட்டிலே சென்று தங்கினன். அவனுடன் கோப்பெருந் தேவியாகிய இளங்கோவேண்மாளும் தம்பியாராகிய இளங்கோவடி களும் அவைப் புலவராகிய சீத்தலைச் சாத்தருைம் அமைச்சர் தலைவராகிய அழும்பில் வேளும் படைத்