பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குள்ள கல்வெட்டுகளுள் ஒன்று தெரிவிக்கின்றது! , விக் கிரமசோழன் மகனாகிய இரண்டாங்குலோத்துங்கசோழன் தில் பேச்சிற்றம்பலத்தையும் பிறவற்றையும் பொன்வேய்த் தான் என்று இராசராசசோழனுலா உணர்த்துகின்றது.' இவற்றையெல்லாம் கூர்ந்துநோக்குமிடத்து, சோழ மன்னர் ஆட்சிக்காலங்களில் தில்லைச்சிற்றம்பலம் பன் முறை பொன் வேயப் பெற்றிருத்தல்வேண்டும் என்பது நன்கு புலனாகும். ஆனால், அதனை முதலில் பொன் வேய்ந்த சோழமன்னன் விசயாலயன் புதல்வனாகிய முதல் ஆதித்தனேயா வன் என்பது நம்பியாண்டார் நம்பியின் திரு வாக்கினால் வெளியாகின்றது. இப் பெரியார், தம் காலத் தில் இவ் வேந்தன் அஷ்வரும்பணியாற்றிய காரணம்பற்றி அச்சொல்லத் நம் திருத்தொண்டர் திருவந்தாதியிற் பாராட்டியுள்ளனர் என்பது தெள்ளிது. இவர் சிதம்பரத் திற்கு அண்மையிலுள்ள திருநாரையூரிலிருந்தவரா தலின் இவ்வரசன் தில்பேயிற்புரிந்த அத்திருத்தொண்டில் தாம் தேரிற் கலந்து கொண்டு அதனை அறிந்திருத்தலும் இயல் பேயாம். ராணம்பற்றி ஆகவே, நம்பியாண்டார் நம்பி இவன் ஆட்சிக்கால மாகிய கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத் தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்தவராதல் வேண்டும். இக்கவிஞர் பெருமான் அந்நூலிலுள்ள, 82-ம் பாடலில் இவன் சிவபெருமான் திருவடி நீழலெய்திய 1 Ibid. Vol. IV. No. 215. 2 இராசராசசோழன் உலா, 59 --56.