பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

39 டிருக்கின்றது. இத்தகைய வேறுபாடுகள் எல்லாம் அவ் வரலாறுகளின் பழமையையே வலியுறுத்துவனவாகும். காலஞ் செல்லச் செல்ல வரலாறுகள் சிறிது வேறுபட்டும் புனைந்துரை வகையாற் பெருகிக் கொண்டும் போதல் இயல்பேயாம்; இனி, அகத்தியர்க்கு உலோபாமுத்திரையார்பால் மெய்யறிவு வாய்ந்த புதல்வர் ஒருவர் பிறந்தனர் என்றும் அவர்க்குச் சித்தர் என்னும் பெயரிடப்பெற்றது என்றும் கந்தபுராணம் கூறுகின்றது. இச் செய்திகளை, "அத்தளங் கொருவ அன்னான் அருளடைத் தங்கணீங்கி மெய்த்தகு மதலை வேண்டி விதர்ப்ப கோள் பயந்தலோபா முத்திரை தனைமுன் வேட்டு முதுக்குறைத் திண்மைசான்ற சித்தனை யளித்த வள்ளல் தென்றிசை நோக்கிச் சென்றுள்." என்ற கந்த புராணப் பாடலால் நன்கறியலாம். 4. அகத்தியனார் தமிழ் நாட்டில் புரிந்த செயல்கள். பண்டைக்கால முதல் சோழவள நாடு சோறுடைத்து' என்று பாராட்டப் பெற்று வருகின்றது. அதற்குக் காரணம், அந்நாடு வானம் பொய்ப்பினும் நான் பொய்யாத காவிரியால் வளம்பெற்றுச் சிறப்பெய்தி யிருப்பதுதான். அதுபற்றியே அந்நாடு காவிரிநாடு எனவும், பொன்னி நாடு எனவும் அறிஞர்களால் புகழப்பெற்றுளது. அத் தகைய பெருமை வாய்ந்த காவிரியாறு, அகத்தியர் தென்னாட்டிற்கு வந்து, மேற்குத் தொடர்ச்சிமலையாகிய