பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணதாசன் படைப்பியல் கண்ணதாசன் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதையுலகில் இன்றியமையா இடத்தைப் பெறு இன்றவர். வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் நானும் ஒருவனன்றோ" என்று இராமலிங்கர் பாடியதற்கேற்ப வழிவழியாக வருகின்ற தமிழ்க் கவிஞர் வரிசையில் மதிப்பிற்குரிய நிலையில் வைத்துப் போற்றத்தகுந்தவர் கண்ணதாசன். இத்தகைய ஒர் இடத்தைத் தயக்கமற நாம் அளிக்கக் காரணமாய் அமைந்த ஆற்றல்கள் ஆராயத் தகுவன. காவியத் தாயின் இளையமகன் காதல் பெண்களின் பெருந்தலைவன் மானிட ஜாதியில் தனிமனிதன் படைப்பதனால் என்பேர் இறைவன்" என்று தனக்கேயுரிய வகையில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் அக் கவிஞன் வெள்ளித் திரையின் குரலை விதிக்குக் கொணர்ந்தவர். வயற்காடுகளில் நாட்டுப்புறப் பாடல்களைக் கொஞ்சம் நகர்த்திவிட்டுத் திரைப்பாடல் களைப் பாடச் செய்தவர். கண்ணதாசன் திரையுலகிற் புகுந்து அதற்கேற்பப் பாடல்களை எழுதிய நிலை யிலிருந்து, தன் பாடல்களுக்கேற்ப இசையமைக்குமாறு: செய்த மாபெரும் புரட்சி வேறெவரும் செய்யாதது. மெட்டுக்காகச் சொற்களை வெட்டிக்கொண்டிருந்த