பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 29 சூழலையும் இனிதே விளக்குவதாகின்றது. இக்கவிதை 'லிரிக் (Lyric) எனப் பாகுபாடு செய்யப்படலாம் எனினும், "அதோ பாரடி என்று தோழியை முன்னிலைப்படுத்துவ தால் Dramatical Lyric என்று வகைப்படுத்துதல் சாலவும் பொருந்தும். கவிஞர்கள் வாழ்வில் அவர்களைக் கவரும் அனுபவங் கள், அவர்களை அலைக்கழிக்கும் நிகழ்ச்சிகள் யாவுமே 'லிரிக் வடிவில் வெளிப்பட்டு நிலைபேறடைகின்றன. 'ஏன், ஏன்?, என்று மனத்தைக் குடையும் கேள்வியையே ஆழ்ந்து வடித்துக் கவிஞர் சோமு அவர் கள் பின்வரும் பாடலில் தந்துள்ளார். மலரே ஏன் நீ உதிர்கின்றாய் மங்கையே ஏன் நீ முதிர்கின்றாய் பகலே ஏன் நீ மாய்கின்றாய் பால்நிலா ஏன் நீ தேய்கின்றாய் கடலே ஏன் நீ இரைகின்றாய் காற்றே ஏன் நீ அலைகின்றாய் கதியே யாரை நாடுகின்றாய் காளே எங்கே ஓடுகின்றாய் இவ்வினாக்கள் நிலைத்துவிட்ட வி ன ா க் க ள். தன்னுணர்ச்சிக்கவிதைகளில் இப்பாடல் நிகரற்றது. தம் வாழ்வின் முற்பகுதியில் தம்மை உலுக்கிய காதலிழப்கைக் கவிஞர் கம்பதாசன், பாட்டு முடியுமுன்னே மீட்டிய வீணையைப் பக்கம் வைத்தே கடந்தாய் எனவருங் கவிதையில் நிலைபேறுடைய நெஞ்சக் குமுறலாக்கி விட்டார்.