உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 இலக்கிய மரபு பவனி வந்தனரே மழவிடைப் பவனி வந்தனரே அவனி போற்றிய குறும்பலாவுறை மவுன நாயகர் எவன நாயகர் சிவனுமாய் அரி அயனுமானவர் கவனமால்விடை அதனில் ஏறியே - பவனி வந்தனரே* எனக் கட்டியங்காரன் நாடக மாந்தரை அறிமுகப்படுத்துதல் உண்டு. இன்று இம்மரபு இல்லை. பழங் கதைகள் மகா அருணாசலக் கவிராயர் என்பவர் இராமாயணத்தை நாடகமாக்கித் தந்துள்ளார். இராம நாடகம் என்னும் அந் நூலில் இனிய இசைப் பாட்டுக்கள் பல உள்ளன. பாரதக் கதை அவ்வாறே 'பாரத விலாசம்'என்னும் பெய ரால் நாடகமாக்கப்பட்டது. நச்சுப் பொய்கை விலாசம், கிருஷ்ண விலாசம், கர்ணராசன் விலாசம் முதலிய நாடகங் களும் பாரதக் கதையை ஒட்டியவைகளே. பூம்பாவை விலாசம், தாருக விலாசம், சாகுந்தல விலாசம் முதலியன வேறு கதைகளைப் பற்றிய நாடகங்கள். இவற்றில் இடை யிடையே உரைநடை அமைந்தாலும் அமையலாம்; இயற்றமிழ் இலக்கணப்படி அமைந்த செய்யுட்கள் இடம் பெறும் ; இசைப் பாட்டுக்களாகிய கீர்த்தனம் சிந்து முதலி யனவும் இடம் பெறும். கீர்த்தனங்களைத் தரு என்று: கூறுவர். தஞ்சையை ஆண்ட மராட்டிய அரசர்களின் காலத்தில் நாடகக் கலை போற்றுதல் பெற்றுத் தலையெடுத்தது.அரிச் சந்திர நாடகம், சிறுத்தொண்ட நாடகம் முதலிய புராணக் கதைகளை விளக்கும் நாடகங்கள் அக்காலத்தில் எழுதப் பெற்றவை. மதன சுந்தர பிரதான சந்தான விலாகம், புரூரவ சக்கரவர்த்தி நாடகம், சாரங்கதரா நாடகம், பாண்டி கேலி

  • திருக்குற்றாலக் குறவஞ்சி, 14,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/104&oldid=1681844" இலிருந்து மீள்விக்கப்பட்டது