உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

106 இலக்கிய மரபு யாகவும், கற்று ஆழ்ந்து உணர வல்லவருக்கு அனுபவத் தால் தெளியும் உண்மை விளக்கமாகவும் அமைய வேண்டும் என்பர் அறிஞர் முர்ரே. கதை மாந்தர் ஆங்கில இலக்கிய உலகில் நாவல் பல எழுதிப் புகழ் பெற்ற (சென்ற நூற்றாண்டுப்) புலவர் சார்ல்ஸ் டிக்கன்ஸ் என்பவரின் கதைகளில் சில குறைகள் உண்டு: நல்ல கதைக்கரு இல்லை, உரைநடை தெளிவாக இல்லை,இலக் கணப் பிழைகள் உள்ளன, கதை அமைப்பில் தவறு உண்டு என்று சில குறைகள் கூறப்படும். ஆயினும், நாடகப் புலவர் சேக்ஸ்பியர் போல், அவரும் நம் நினைவை விட்டு நீங்காத கதை மாந்தர் பலரைப் படைத்துள்ளார். சேக்ஸ்பியர்க்கு மிக விரிவான வாழ்க்கையனுபவம் இருந்தது போல் அவர்க்கும் இருந்தது. அதனாலேயே, வாழ்க்கையின் பல பகுதிகளுக்கு உரிய பலவகை மாந் தரைப் படைத்து இத் துறையில் வெற்றி பெற்றார். பக்கத்துத் தெருவில் உள்ள ஒருவரை வாரக் கணக் கில் பார்த்துக்கொண் டிருக்கலாம். அவருடைய உயரம் தோற்றம் உடை நடை முதலியவற்றை நன்றாகப் பார்த்து நினைவில் வைத்திருக்கலாம். சிலரால் அவ்வளவு தான் முடியும். அவர் புறத் தோற்றத்தை மனக்கண்ணில் பதிய வைத்தலில் வல்லவராக இருப்பர். ஆனால், பக்கத்துத் தெருவினரின் முகத்தையும் நடையையும் பேச்சையும்செயலை யும் சில நாட்கள் சில பொழுது பார்த்த அளவிலேயே அவருடைய உள்ளத்தில் நிகழ்வன இவை இவை என்று

  • A truly great novel is a tale to the simple, a parable to the wise, and a direct revelation of reality in the light of a unique consciousness to the man who has made it part of his being.

J. M. Murry, Discoveries, p. 148.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/110&oldid=1681841" இலிருந்து மீள்விக்கப்பட்டது