உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

இலக்கிய மரபு


கலிப்பா, பரிபாடல் ஆகியவற்றால் மிக்க அடிகளால் அமைந்த பாக்கள் ஐந்து முதல் ஐந்நூறு வரையில் கொண்டது மேற்கணக்கு என்றும், குறைந்த அடிகளால் ஆகிய வெண்பாக்களை உடைய தொகை நூல் கீழ்க்கணக்கு, என்றும் கூறுவர்.

அகவலும் கலிப்பா வும்பரி பாடலும்
பதிற்றைந் தாதி பதிற்றைம் தீறா
மிகுத்துடன் தொகுப்பன மேற்கணக்கு
எனவும் வெள்ளைத் தொகையும் அவ்வகை
எண்பெறின் எள்ளறு கீழ்க்கணக் கெனவும் கொளலே.*

எண்ணிக்கை

நூல்களில் அமையும் செய்யுள் வகைகளையும் எண்ணிக்கையையும் கருதி அவற்றை அழகிய மாலைகளுக்கு ஒப்பிட்டுப் பெயர் வைத்துள்ளனர். வெண்பாவும் கலித் துறையும் கலந்து அந்தாதியாய் நூறு செய்யுள் வருவது இணைமணி மாலையாம். அவையே இருபது வரின் இரட்டை மணி மாலையாம். இரு வேறு மணிகளால் அமைந்த மாலை போல் விளங்குதலால், அப்பெயர்கள் தந்தனர். வெண்பா கலித்துறை அகவல் ஆகியவை சேர்ந்து முப்பது செய்யுள் வரின் மும்மணி மாலையாம். மேற்கூறிய மூன்றோடு விருத்தமும் சேர்ந்து நாற்பது செய்யுள் வரின் நான்மணி மாலையாம். இவ்வாறே மும்மணிக்கோவை நவமணிமாலை என்ற நூல் வகைகளும் உண்டு. ஒருபா ஒருபஃது, இருபா இருபஃது முதலிய சில நூல்வகைகள் செய்யுளின் எண்ணிக்கையால் பெயர் பெற்றவை.

சொற்களால் பெயர் பெறல்

பத்து, இருபது, ஐம்பது அல்லது நூறு பாட்டுக்களை ஒரே வகையாகப் பாடி ஒவ்வொரு பாட்டிலும் இடையில்


  • பன்னிரு பாட்டியல், 222.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/12&oldid=1688842" இலிருந்து மீள்விக்கப்பட்டது