உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நாவல் 129 வந்து பேசிவிட்டுச் செல்வதைப் போன்றது இது.இவ் வகை நாவல்கள் மிகக் குறைவாகவே உள்ளன. மாந்தரின் உணர்ச்சிகளையும் மனப்பான்மைகளையும் உணர்த்துவதற்கு. இது தக்க கருவி என்று கருதி ஆசிரியர் சிலர் இந்த முறை யைக் கையாள்வர். மாந்தரின் வாழ்க்கையில் உள்ள புறச் செய்திகளையும் புறப் போராட்டங்களையும்விட, உள்ளத்தில் நிகழும் அகப் போராட்டங்களே இக்காலத்தவர்க்குக் கவர்ச்சியாக இருத்தலால், நாவலாசிரியர் சிலர் இந்த அமைப்பு முறையை அகப் போராட்டங்களை விளக்கு. வதற்குப் பயன்படுத்துகின்றனர். ஒரு நாவலில் உள்ள சிறந்த மாந்தர் ஒருவரே முழுக் கதையும் கூறுவதாக எழுதுவது ஒருவகையில் சுவை யாகவே அமைகின்றது. ஆனால், கதைமாந்தர் நால்வர் அல்லது ஐவர் மாறி மாறிக் கூறுவது போல் ஒரு நாவல் அமையுமிடத்து, அது கற்பவர்க்குத் துன்பம் தருவதாகும். ஒருவர் கூற்றிலிருந்து மற்றொருவர் கூற்றிற்குக் கற்பவரின் கற்பனையை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டி யிருத்து. லால், அவர்க்குச் சுவையும் குன்றும்; கதையும் விட்டு விட்டுத் தோன்றும். கடிதம், நாட்குறிப்பு கடிதங்களின் வாயிலாகவும் நாட் குறிப்பின் வாயிலா கவும் கதையைப் புலப்படுத்தும் முறையும் (the documen tary method) நாவலில் உண்டு. அது எழுதுவோர்க்குச் They do not expect the characters about whom they read to exhibit the old ethical simplicity, and they no longer regard a record of what people do as the most important information to be conveyed about them. The inner life, it is increasingly realised, may be more important than the outer, and the strife between conflicting clements in the same person more vivid than strife between persons. C. E. M. Joad, Guide to Modern Thought, p. 235...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/133&oldid=1681985" இலிருந்து மீள்விக்கப்பட்டது