உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

132 இலக்கிய மரபு இருவகையாலும் நம் உள்ளத்தைக் கவரும் கவர்ச்சியுள்ள கதையே சிறந்த கதை எனப் போற்றுவர். உரையாடல் கதையில் அமையும் உரையாடல்கள் வாழ்க்கையில் அன்றாடம் நடைபெறும் உரையாடல்களின் போக்கை ஒட்டி இருந்தால் போதும். அன்றாட உரையாடல்கள் அப்படியே இருத்தல் தேவையில்லை. தெளிவில்லாத சொற்களை விட்டு, தேவையற்ற சொற்களையும் விட்டு, கருத்தையும் உணர்ச்சியையும் உணர்த்தும் சொற்களை மட்டும் அமைத் தால் போதும். சுவையற்ற பகுதிகளை விட்டு, கதைக்கு. இன்றியமையாத சுவையான பகுதிகளை மட்டும் அமைத்தல் வேண்டும். கற்பவரின் சிந்தனையை வேறு போக்கில் ஈர்த்துச் செல்லாமல், கதைக் கருவையே நோக்கிச் செல்வ தாக அமைத்தல் வேண்டும், கதைமாந்தரின் பண்புகளை யும் விளக்க வல்லதாக அமைத்தல் வேண்டும்.*யார்யார் வாயில் எத்தகைய கருத்துக்களும் எத்தகைய சொற்களும் பிறக்கும் என்பதைக் கற்பனையில் உணர்ந்து அவரவர்க்கு ஏற்ற சொற்களை அமைத்தல் வேண்டும். நிகழ்ச்சிகளுக்கு. ஏற்றவாறு அமைந்த உரையாடலாகவும் இருத்தல் வேண்டும். அவ்வாறு அமையும்போது, சில இடங்களில், அன்றாடப் பேச்சிலேயே அழகான தொடர்களும் சொல் லோவியங்களும் வாய்த்தல் காணலாம்.

  • When a character is once conceived not only his actions, but also his language should be true-that is to say, such as he might naturally use.--T. G. Tucker, The Judgment and Appreciation of Literature, p.121.

† After all, writing is founded on common speech, and there is no reason to forget that out of the slovenliness and incorrectness which offend the pedagogue apt phrases and picturesque idioms arise. -W. S. Maugham, A Writer's Note book..

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/136&oldid=1681994" இலிருந்து மீள்விக்கப்பட்டது