உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சிறுகதை 169 வ.வே.சு.ஐயர் மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதை களை 1927-ஆம் ஆண்டில் வெளியிட்டு வெற்றி பெற்றார். வளர்ச்சி நாவலுக்குச் சொன்னவற்றில் உணர்ச்சி கற்பனை முத லிய பல சிறுகதைகளுக்குப் பொருந்தும். சுவையமைப்பு, உரையாடல் அமைப்பு, இயற்கை வருணனை முதலிய பலவற் றில் நாவல் போலவே சிறுகதையும் அமையும். ஒரு திங்கள் வெளியீட்டிலோ வார வெளியீட்டிலோ ஒரே இதழில் முழு மையாய் வரக்கூடியதாக இருப்பது சிறுகதையே ஆதலின், அவை சிறுகதையின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் கார ணமாக அமைந்தன.ஓர் இதழில் புலப்படுத்தக்கூடியவாறு நாவலின் ஒரு பகுதியையோ அல்லது ஒரு பண்பையோ வெளியிட முடியாது. பண்புகளைப் படிப்படியே வளர்த்து விளக்க வேண்டியிருப்பதாலும், கதை நிகழ்ச்சிகளை அடுத் தடுத்து நகர்த்திச் செல்ல வேண்டியிருப்பதாலும் சிக்கலும் கோவையும் மிக்க நாவலால் முடியாத அதனைச் சிறுகதை செய்ய முடிந்தது. அரை மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரையில் உள்ள காலவரையறையில் படித்து முடித்து மகிழக் கூடியதாக சிறுகதை விளங்கவேண்டும் என்பது எட்கார் ஆலன் போவின் கருத்து. இப்போது கால்மணி நேரத்தில் படிக்கக் கூடிய சிறு கதைகள் பெருகியுள்ளன, ஐந்து நிமிடத்தில் படிக்கக் கூடிய சிறுகதைகளும் சில இதழ்களில் வெளியாகின்றன. இக்காரணத்தாலேயே றுகதைக்குத் தனி வளர்ச்சி அமைவதாயிற்று. சிறுகதை எழுதப்பட்ட தொடக்கத்தில், உள்ள இலக்கணங்களின்படி எழுதப்படவில்லை. சிறிய கதையே அப்போது சிறுகதையாகக் கருதட் ஆதலின் கதையின் சுருக்கமே அப்போது சிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/173&oldid=1681959" இலிருந்து மீள்விக்கப்பட்டது