உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மரபு 177 ஓவியம் தீட்டுவோன், காடும் மேடும் விளங்க, கல்லும் புல்லும் தோன்ற எழுதல் வேண்டும். கலைஞரின் உள்ளம் விழையுமேல், அவற்றை மேலும் அழகுபடுத்தி வளம் மிக்க தாகக் காட்ட முயலலாமே அன்றி, இல்லாததையோ பொருந்தா ததையோ அமைத்து எழுதுவதில் பயன் இல்லை. இருவகை இவ்வா று தீட்டப் பெறும் பின்னணி இருவகைப்படும். ஒன்று, இயைபாம் பின்னணி; மற்றொன்று, முரணாம் பின்னணி. இயைபாக (ஒத்ததாக) அமையினும், முரண் பட்டதாக அமையினும், உள்ளத்து உணர்ச்சியை நன்கு. எடுத்துக்காட்ட உதவ வேண்டும். ஒரு தாய் தன் குழந்தையோடு கொஞ்சுவதாக ஓவியம் அமைவதாயின், அதற்குப் பின்னணியாக அமையத் தக்கது, பசுவும் கன்றுமாக இருக்கலாம் ; அல்லது, மரமும் கொடியுமாக இருக்கலாம்; அல்லது, வானத்தின் திங்களும் விண்மீனுமாக இருக்கலாம். இவை எல்லாம் இயைபாம் பின்னணிகள். அவ்வாறன்றி, தாயும் குழந்தையும் கொஞ்சும் காட்சிக்குப் பக்கத்தில் வாடி உதிர்ந்த மலர் ஒன்று அமைந் தால் அது பொருந்தாததாகும்; கன்று இல்லாத பசு, பசு இல்லாத கன்று, எருது இரண்டு, ஆணும் பெண்ணுமான பறவை இரண்டு முதலானவற்றை அமைத்தாலும் அவை பொருந்தாதன ஆகும். காதலனுடைய வருகையை எதிர்நோக்கிக் காத் திருக்கும் ஒருத்தியின் படமாயின், அதற்குப் பின்னணியாக ஒரு மரக்கிளையும் அதில் தனிப் பறவை ஒன்றும் தீட்டலாம். இது இயைபாம் பின்னணி. இது கலைஞரின் உணர்ச்சியை எடுத்துக்காட்ட உதவுவதாகும். அந்தக் காதலியின் ஏக்கத்தை மிகுதிப்படுத்த வேறொரு. வகையாகவும் பின்னணி அமைக்கலாம். அதாவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/181&oldid=1681930" இலிருந்து மீள்விக்கப்பட்டது