உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

182 இலக்கிய மரபு அவளுடைய உள்ளம் அடைந்த நிறைவுக்கும் மகிழ்ச் சிக்கும் பின்னணியாக அமைந்தது வவ்வாலின் இன்பமான வாழ்க்கை. வவ்வால், பால் கலந்தாற்போன்ற இனிய மாம் பழத்தைத் தின்று, அந்த இனிப்புக்கு மாற்றாக, நெல்லி மரத்தின் புளித்த காயைத் தின்கின்றது. பிறகு அடுத் துள்ள மூங்கில் புதரில் முள் இல்லாத கழையைப் பற்றிக் கொண்டு, ஊசலாடுகிறது: அமுதம் உண்கநம் அயலில் லாட்டி பால்கலப் பன்ன தேக்கொக்கு அருந்துபு நீல மென்சிறை வள்ளுகிர்ப் பறவை நெல்லி யம்புளி மாந்தி அயலது முள்இல் அம்பணை மூங்கிலின் தூங்கும். குறிப்புப் பொருள் புலவர், தாம் உணர்த்த விரும்பும் ஒன்றை நேரே வெளிப்படையாக உணர்த்தாமல், மறைத்துப் புலப்படுத்து தல் கலைத் திறமையாகும். அதனால் உணர்த்த விரும்பு வதை உள்ளத்தில் நன்கு பதியவைக்க முடிகிறது. அவ் வாறு மறைத்து உணர்த்தப்படும் குறிப்புப்பொருளை வியஞ் சனம் என்பர் வடநூலார். குறிப்புப்பொருள் எந்தப்பாட்டில் மற்றப் பொருளினும் சிறந்து விளங்குகிறதோ, அந்தப் பாட்டே தலையானது (உத்தமம்) என்பர். குறிப்புப்பொருள் மற்றப் பொருளுக்கு நிகராக அமையும் பாட்டு இடைப்பட் டது (மத்திமம்) என்பர். குறிப்புப்பொருள் இல்லாத சித் திரகவி முதலானவற்றை (அதமம்) என்பர்.

  • குறுந்தொகை, 201.

வடநூலார் கடைப்பட்டன் †S. Kuppuswami Sastri, Highways and Byways of Literary Criti- cism in Sanskrit, p. 42.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/186&oldid=1681948" இலிருந்து மீள்விக்கப்பட்டது