இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
________________
அன்ன நடையார் அலர்ஏச ஆடவர்மேல் மன்னும் மடல்ஊரார் என்பதோர் வாசகமும் தென்னுரையிற் கேட்டறிவது உண்டு அதனை யாம்தெளியேம் மன்னும் வடநெறியே வேண்டினோம். உன்னி உலவா உலகறிய ஊர்வன்நான் முன்னி முளைத்தெழுந் தோங்கி ஒளிபரந்த மன்னியபூம் பெண்ணை மடல்.
தமிழ்மரபுக்கு ஒவ்வாது எனினும் வடமொழி மரபினை விரும்புகின்றேன் என்றும், அதனால் மடல் ஊர்வேன் என்றும் கூறுதல் காணலாம். மடல் ஏறுதல் ஒத்த அன்புடைய ஐந்திணைக் காதலுக்கு ஏற்காது என்பது தொல்காப்பியனார் கருத்து; பொருந்தாக் காமமாகிய பெருந்திணையின் பகுதியாக இதனை அவர் கூறியுள்ளார் :
ஏறிய மடல்திறம் இளமை தீர்திறம் தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம் மிக்க காமத்து மிடலொடு தொகைஇச் செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே*
மடல் என்னும் இப் பாட்டைப் பாடுவோர் வெண் கலிப்பா என்னும் செய்யுள்வகையால் பாடுதலை மரபாகக் கொண்டனர். வருணகுலாதித்தன்மடல் என்பது இவ் வகைக்கு எடுத்துக்காட்டான நூலாகும்.
தூது
பிள்ளைத் தமிழ், உலா முதலியவை தமிழிலக்கியத்திற்குச் சிறப்பானவை. தூது என்னும் நூல்வகையோ, வடமொழியிலும் மற்ற இந்திய மொழிகளிலும் உள்ளதே
தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத். 51.