________________
34 இலக்கிய மரபு மூவகைப்படுத்துவர் வின்செஸ்டர்.* இம் மூவகையிலும் உலவர் தாம் மறைந்து நின்று தம் கற்பனைமாந்தரைப் பேசச் செய்தல் காணலாம். அதனாலேயே இவை நாடகப் போக்கின ஆகின்றன. நமக்கு ஒன்று உரையார் ஆயினும் தமக்கு ஒன்று இன்னா இரவின் இன் துணை யாகிய படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே என்னும் பாட்டில் தன்னைக் காதலன் மறந்ததாக எண்ணித் துயருறுகின்ற தலைவியின் உணர்ச்சியைக் காணலாம். பாலும் கசந்ததடி- சகியே படுக்கை நொந்ததடீ கோலக் கிளிமொழியும் - செவியில் குத்தல் எடுத்ததடீ என்று பாடுதலும் அத்தன்மையானதே. சொந்த நாட்டிற் பரர்க்கடிமை செய்தே துஞ்சிடோம் - இனி - அஞ்சிடோம் எந்த நாட்டினும் இந்த அநீதிகள் ஏற்குமோ - தெய்வம்- பார்க்குமோ என்று தேசபக்தர் சிதம்பரம் பிள்ளையின் கூற்றாக அவ ருடைய உணர்ச்சியைப் பாரதியார் பாடிய பாட்டும்
- W.H.Hudson, An Introduction to the study of Literature
pp. 111-3. குறுந்தொகை, 266. பாரதியார் பாடல்கள், கண்ணன் என் காதலன். ஷை- தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை மறுமொழி. .